தப்பான பிரா சைஸ் அணிந்தால் என்னாகும் தெரியுமா?

பெண்களில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உள்ளாடைகளுடைய அளவு தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதன் எண் தான் தெரியுமே தவிர அதில் உள்ள கப்களின் சைசான ஏ, பி, சி உள்ளிட்டவை தெரியாது. ஒரு சிலருக்கு சுற்றளவு அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மார்பகங்களுடைய கப் சைஸ் அதிகமாக இருக்கும். இவ்வாறு சரியான சைஸில் இல்லாமல் பிரா அணிவதன் மூலம் உடல் ரீதியாக பல பின்விளைவுகள் ஏற்படும். அவற்றை சிறப்புத் தொகுப்பாக உங்களுக்கு வழங்குகிறது த ககாரிகை.

தோள்பட்டை வலி

டைட்டான ஸ்ட்ரேப் கொண்ட பிராவை அணியும் போது தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் பாதிக்கும். பின், தோள்பட்டையிலும், கழுத்திலும் வலி ஏற்படும். இந்த வலி பின்னாளில் ரத்த ஓட்டத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மார்பக வலி

எடை கூடிய பின்பு உடைகளை மாற்றும் பலரும் உள்ளாடைகளையும் மாற்றுவார்களா என்பது சந்தேகமே! பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள், அதற்கு உரிய அளவை விட குறைவான சைஸ் கொண்ட பிராக்களையே தொடர்ந்து அணிவார்கள். அப்படி அணியும் போது மார்பகங்களில் வலி ஏற்படும். குறிப்பாக உடற்பயிற்சி செய்வோர் இதில் அதிக பாதிப்பை சந்திப்பார்கள். தசைகளில் வலி ஏற்படுத்தி உடற்சதை குறையும். அப்போது அவர்கள் அதிக வலியை உணர்வார்கள்.

சருமம் பாதிக்கும்

இறுக்கமான பட்டை கொண்ட பிராக்களை அணியும் போது, அதிக உராய்வால் அரிப்பை ஏற்படுத்தும். பின், தோல் சிவக்கும் பிரச்னை ஏற்படும். பிராக்களின் அளவு மட்டும் இன்றி தரத்தையும் சரியாக பார்த்து வாங்காவிட்டால் தோல் பிரச்னைகள் ஏற்படும்.

முதுகு வலி

பெரிய மார்பகங்களுக்கு சமமான சப்போர்ட் கிடைக்காமல் இருந்தால் அது முதுகுவலியையும், இடுப்பு வலியையும் ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்பு ஒரு மறைமுக பாதிப்பாகவே கருதப்படும்.

விலா எலும்பு வலி

பிராக்கள் விலா எலும்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். அது தாக்கத்தை ஏற்படுத்தி அதிக வலியை ஏற்படுத்தும். குறிப்பாக அன்டர் வயர் கொண்ட பிராக்களை அணியும் போது, விலா எலும்பில் வலியை அதிகரிக்கக் கூடும்.

தொங்கும் மார்பகங்கள்

சரியான சப்போர்ட் இல்லாத பிரா அணியும் போது அது தொங்கும் வகையில் இருக்கும். இதனால் உருவமும், வடிவமும், தோற்றத்தையும் மாற்றிவிடும். மேலும், டைட்டான பிராவின் அளவை மீறி வெளியேறி இருக்கும் பிராக்களும் சற்று சங்கடமான தோற்றத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளங்களைப் பின் தொடருங்கள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE