பேன் கேக் என்றால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், அதையே சத்தாக எப்படி மாற்றிக் கொடுக்கலாம் என த காரிகையின் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிஸ்-ல் இப்போது பார்க்கலாம்.

  • தேவையான பொருட்கள்

இரண்டு உருளைக்கிழங்கு தோல் நீக்கி துருவியது.

கால் கப் பாலக்கீரை பொடியாக நறுக்கியது

2 டேபிள் ஸ்பூன் சோள மாவு

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

அரை டீஸ்பூன் கரம் மசாலா

கால் டீஸ்பூன் மிளகுப்பொடி

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் நறுக்கியது

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

முதலில் இரண்டு உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொள்ளவும். அதன் தோலை சீவி விட்டு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்.

துருவிய உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். இதன் மூலம் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் தனியே பிரிந்து விடும்.

மீதமுள்ள நீரை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். சரியாக வடிகட்டாவிட்டால் மேலும் மாவு சேர்க்க வேண்டி வரும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, உப்பு, கடலை மாவு, சோள மாவு, மிளகு பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உள்ளிட்டவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. இந்தக் கலவையை இரண்டாக பிரித்து வைத்துக் கொள்ளவும். நீர் தன்மை அதிகமாக இருந்தால் மேலும் சிறிது கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

தோசை கல்லை சூடு செய்து கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். தோசை கல் மீது இந்த கலவையை எடுத்து மிகவும் லேசான வட்ட வடிவத்தில் பரப்பி விடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு முருகும் வரை சமைக்கவும். இதேபோல் மீதமுள்ள மாவையும் பேன் கேக் போல சமைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன், வேகவைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன், முளைகட்டிய பாசிப்பயறு, ஊறவைத்த உலர் திராட்சை, துருவிய பாதாம் உள்ளிட்டவற்றை சேர்த்தால் இன்னும் ஹெல்தியாக இருக்கும்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்குள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE