Back to school பதட்டம் தணிக்க இத படிங்க
இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்கூல்ஸ் ரியோப்பன் ஆகப்போகுது. இத்தனை நாள் குழந்தைங்க, இன்னும் சொல்லப்போனால் அம்மாக்கள் கூட காலை நேரத்துல தாமதமா எழுந்திருப்பாங்க. காலை சாப்பாடு மதியத்துக்கும் மதிய உணவு மாலைக்கும் மாலை உணவு இரவுக்கும் மாறி இருக்கும். விளையாட்டு,பொழுதுபோக்கு, ஊர் சுற்றல் அப்படின்னு ஜாலியாக பொழுது கழிச்சு இருப்பாங்க. ஆனா அதிகாலை நேரம் பரபரப்பு உருவாக்குற பேக் டு ஸ்கூல் நெனச்சாலே பலருக்கும் பதட்டம் உருவாகும். அதை தணிக்க த காரிகை உங்களுக்கு சூப்பரான டிப்ஸ்களை வழங்குகிறது.
நேரம் இருக்கும்போதே ஒரு மாதத்துக்கும் தேவையான குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு தேவையான லஞ்ச் ரெசிப்பிஸ், ஸ்கேன்ஸ் மற்றும் பழங்களோட பட்டியல திட்டமிடுவது நல்லது. அதுமட்டுமில்லாமல் அந்த வாரத்துக்கு தேவையான காய்கறி, சமையல், ஸ்னேக்ஸ், மளிகைப் பொருட்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கி அடுக்கிடலாம்.
ஏற்கனவே அவர்கள் பயன்படுத்தி வந்த லஞ்ச் பாக்ஸ், ஸ்பூன், டவல், கைக்குட்டை மாஸ்க் உள்ளிட்டவற்றை எல்லாமே சரியா இருக்கா அப்படின்னு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். காலை நேரத்தில் பள்ளிக்கு அனுப்பும் போது அவசர அவசரமா வாட்டர் பாட்டிலையும், அதோட மூடியையும், டிபன் பாக்ஸோட மூடியையும் தேடி அலையும் போது டென்ஷன் தான் அதிகமாகுமே தவிர ஸ்கூல் பஸ் போயிடும். ஏற்கனவே பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தி இருந்தா அதை தூக்கி போட்டுட்டு எவர்சில்வர் பாக்ஸ்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் பாக்ஸ்களில் சூடான உணவை பரிமாறும் போது அது கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஸ்டைலுக்காக பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் வாங்கி கொடுத்து அனுப்பலாம். ஆனால், குழந்தையை தூக்கிக் கொண்டு அடிக்கடி மருத்துவமனை ஓடும் பின்விளைவை நினைத்து பார்த்து எவர்சில்வருக்கு மாறவும்.
- ஷூ
குழந்தைங்க வெகு சீக்கிரத்தில் வளரக்கூடியவர்கள். எனவே ஏற்கனவே அவங்க பயன்படுத்திட்டு இருந்த ஷூ தற்போதைக்கு சரியா பொருந்துதா?அப்படின்னு பார்க்க வேண்டும். முக்கியமா ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து அதை எடுக்கறதுனால உள்ள பூச்சி, சில விஷ ஜந்துக்கள், இன்ஃபெக்ஷன் அதிகம் உருவாக்கக்கூடிய தூசு உள்ளிட்டவை இருக்கலாம். எனவே ஷூ சாக்ஸ் எல்லாத்தையும் சுத்தமா கழுவி வெயிலுல நல்லா காயவைத்து பயன்படுத்துறதுக்கு தயாரா வைக்கலாம். ஷூக்களுக்கு பாலிஷ் போடுவதை மறக்க வேண்டாம்.
- யூனிஃபார்ம்
குழந்தைகள் சீக்கிரம் வளரும்னு ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி அவங்களுக்கு பழைய சீருடைகள் பெரும்பாலும் இறுக்கமாகவோ குட்டையாகவோ மாறியிருக்கலாம். எனவே தற்போது அவர்களுக்கு அந்த சீருடை சரியா இருக்கா என சரி பார்க்கவும். அவற்றைத் துவைத்து முன்கூட்டியே அயன் செய்து வைக்கலாம். அல்லது தையல்காரரிடம் கொடுத்து ஆல்ட்ரேஷன் செய்யலாம். அதுவும் முடியாத பட்சத்தில் புதிய சீருடைகள் தைச்சு வாங்கிக்கலாம்.
- ஸ்கூல் பேக் லஞ்ச் பேக்
பொருட்களை சரியான முறையில் கையாளும் குழந்தைகளாக இருந்தால் பரவாயில்லை. ஆனா போன வருஷமே அதை இஷ்டத்துக்கு தட்டி எடுத்து இந்த வருஷம் புதுசா வாங்கி கொடுப்பாங்க அப்படிங்கிற நினைப்புல குழந்தைகள் இருக்கலாம். ஆனா அது பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் இருந்தா, அதையே பயன்படுத்தனும் தூக்கிப் போடக்கூடாது அப்படிங்கற மனநிலையை குழந்தைகள் மத்தியில உருவாக்கணும். ஆனால் குழந்தைகளுக்கு தூக்கிச் செல்லும்போது உருத்துர மாதிரியும் பஞ்சுகள் பிரிந்து போய் வித்யாசமான தோற்றத்தில் இருந்தால் புதிதாக பேக் வாங்குவது நல்லது.
- அட்டை போடுதல்
பள்ளிகள் திறந்த உடனே புதிய புதிய ஆக்டிவிட்டீஸ் ப்ராஜெக்ட் கொடுத்து விடுவார்கள். பெரும்பாலும் அதைப் பெற்றோர்தான் செய்து முடிக்க வேண்டி இருக்கும். பணம் செலுத்தியதும் புத்தகங்கள் நோட்டுகள் முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். எனவே எந்த மாதிரியான அட்டை போட வேண்டும் என்று முன்கூட்டியே அவர்களது கிளாஸ் மிஸ் கிட்ட கேட்டு நேரம் கிடைக்கும்போது அட்டை போட்டு வைக்கலாம்.
- உறக்கம்
பள்ளி திறக்கும் சில நாட்களுக்கு முன்பாகவே அவர்களை நேரமாகவே தூங்கி காலையில் சீக்கிரமாகவே எழுப்ப பழக்குங்கள். இத்தனை நாட்கள் குழந்தைகள் விளையாட்டு, தொலைக்காட்சி, youtube, சமூக வலைதளங்கள், கோடைகால வகுப்புகள் என பொழுதை கழித்து இருக்கலாம். திடீரென முழு நேர படிப்புக்கு அவர்கள் மாறும் சிரமத்தை குறைக்க ஏதேனும் புத்தகங்களை கொடுத்து மீண்டும் மறு வாசிப்பு செய்ய பழக்கலாம்.
த காரிகையின் இதுபோன்ற டிப்ஸ்களை பயன்படுத்தி மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் பள்ளிக்கு அனுப்ப வாழ்த்துக்கள்.