27 ஆண்டாச்சு! இந்தியாவில் உலக அழகிப் போட்டி
உலகமே ஆவலோடு ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் போட்டி. உலகின் 130 நாடுகளில் இருந்தும் அந்நாட்டிலேயே மிகவும் அழகான பெண் என ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர்கள் 130 பேரும் இந்தப் போட்டியில் பங்கேற்பர். அவர்களில் மிகச்சிறந்த அறிவான திறமைசாலியும், அழகியும் யார் என தேர்ந்தெடுத்து உலக அழகியாக பட்டம் சூட்டுவார்கள்.
- இதற்கு முன் எப்போது நடந்தது?
அவ்வாறு 2023-ம் ஆண்டும் உலக அழகிப்போட்டி நடைபெறவுள்ளது. அதுவும் எங்கு தெரியுமா? நம் நாட்டில்தான். ஆம், இதற்கு முன் 1996-ம் ஆண்டுதான் உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டது. 27 ஆண்டுகளுக்குப் பின் உலகமே எதிர்பார்க்கும் போட்டியை நடத்த இந்தியா தயாராகிறது, வரும் நவம்பர் மாதம் இந்த போட்டிகள் இந்தியாவில் ஏதேனும் ஒரு பிரபலமான நகரில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
- மிஸ் வேல்ட் நிர்வாகம் மகிழ்ச்சி
இந்தியாவில் போட்டி நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக மிஸ் வேல்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா தெரிவித்துள்ளார் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தையும் அழகிய இந்திய நகரங்களையும் காண தாங்கள் அதிக ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
- இந்தியா தாய்வீடு போன்றது- தற்போதைய உலக அழகி
தற்போதைய உலக அழகியான கரோலினா பைலாஸ்கா இதைப் பற்றி கூறும் போது ” உலக அழகிக்கு நிகரான மதிப்பு கொண்டது இந்த அழகான இந்தியா. அத்தகைய இந்த நாட்டில் தனது கிரீடத்தை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி. தாய் வீட்டுக்கு வந்தது போல உபசரிப்பில் இந்தியாவைப் போல் ஒரு நாட்டை பார்க்க முடியாது. இந்தியாவின் பன்முகத் தன்மைகள் ஒற்றுமை மரியாதை அன்பு என பலவற்றை இங்கிருந்து கற்றுக் கொள்ளலாம்.” என்றார்.
- இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?
இந்தியா சார்பில் போட்டியில் பங்கேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற அந்தந்த நாட்டில் மிஸ் தேசப்பட்டம் வென்றெடுக்க வேண்டும். அதுபோல் இந்தியாவில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற சீனி ஷெட்டி இந்தியாவிலேயே இப்போது நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
- இதுவரை பட்டம் வென்ற இந்தியர்கள்
இந்தியா இதுவரை ஆறு முறை உலக அழகை பட்டம் வென்றது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர்.
இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களையும் பின் தொடருங்கள்.