விம்பிள்டன் வென்ற பிறகு முதன்முறையாக உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்திருந்த சமயத்தில் கார்பின்முகுருஷாவை கவிழ்த்தவர் இவர்தான். அதுவும் ஒற்றை ஹலோ – ரசிகராக ஒரு செல்ஃபி அவ்வளவுதான்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கார்பின்முகுருஷா. இவர் 2016 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2017 ஆம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

பிரபல டென்னிஸ் நட்சத்திரமும் முன்னாள் பிரென்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் சாம்பியனுமாக வலம் வந்தவர்.

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற தருணம் அது. 2021 ஆம் ஆண்டு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் அருகே ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார் முகுருஷா.

அன்றைய தினம் மதியம் ஹோட்டலில் உணவருந்தி விட்டு மிகவும் களைப்பாக இருந்ததால் உறங்க மனம் இன்றி இருந்தார். அதேசமயம், மிகவும் போர் அடித்துப் போனதால் வெளியே செல்ல நினைத்தார்.

சிறிது தூரம் நடந்து வரலாம் என முடிவெடுத்து ஹோட்டலை விட்டு வெளியே வந்து சாலை வழியாக அருகில் உள்ள பூங்காவை அடைந்தார். நட்சத்திர விடுதியில் இருந்து வெளியேறியதும் சாலையில் சற்று தூரம் நடந்து சென்று அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அந்த பூங்காவில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கார்பின்முகுருஷா-வை கண்டதும், மூச்சிறைக்க ஓடி வந்த ஹலோ சொன்னவர் ஆர்தர் போர்ஜஸ். பூங்காவில் வாக்கிங் சென்றவரிடம் ஒரு ஹலோ சொன்னார். பின் அவரது அனுமதி உடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினார். தனது ரசிகருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் முகுருஷா.

“ஆனா, பையன் இவ்ளோ அழகா இருக்கானே?” என்ற எண்ணம் முகுருஷாவுக்கு தோன்றியது. அந்த செல்ஃபி-க்கு போஸ் கொடுக்கும் போது தனது மனதில் காதல் பட்டாம்பூச்சிகள் பறந்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

உன்னுடன் ஒரு ரசிகராக செல்பி எடுத்துக் கொண்ட ஆர்தர் போர்ஜஸ் நியூயார்க்கில் பிரபலமான டாம் போர்ட் பிராண்டில் பணிபுரிந்து வந்தார். ஆனால், முகுருஷாவோ உலகின் நம்பர் 3 டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்த சமயம் அது. எதிர்பாராத விதமாக அவர்களுக்கு இடையே மீண்டும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

இருவரும் அடிக்கடி எதேர்ச்சியாக சந்தித்துக் கொண்டனர். அழகானதொரு நட்பும் மலர்ந்தது.

ஒரு கட்டத்தில் ஆர்தர் முகுருஷா மீதான தனது காதலை வெளிப்படுத்தினார். முகுருஷா மனதிலும் காதல் இருந்தாலும் அவரது மனதில் பல வகையான எண்ண ஓட்டங்கள் தோன்றியது. உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டார் முகுருஷா. ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஆம் என்று மறுமொழி கொடுத்தார்.

அத்தருணம் வாழ்வில் மிகவும் ரொமான்டிக்கான தருணமாக அமைந்ததாக முகுருஷா தெரிவித்தார். இந்நிலையில் தான் கார்பின் முகுருஷாவும் ஆர்தர் போர்ஜஸும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர்.

அதில் “ஒரே ஒரு ஹலோவில் என்னை கொள்ளை கொண்டாய்!” என கார்பின் முகுருஷா கேப்சன் பதிவிட்டுள்ளார்.

விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் திருமணம் நடக்கும் இடம், நிச்சயம் ஒரு கடற்கரையை ஒட்டிய பகுதியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முகுருஷாவுக்கு அவரது ரசிகர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் கமென்ட் பாக்சில் உங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள “த காரிகை“-யின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE