இது தெரிஞ்சா இனிமே நுங்க வாங்காம இருக்க மாட்டீங்க!
சீசனுக்கு கிடைக்கும் நுங்கு பழங்களை சுவைப்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. வெயில் காலத்தில் நுங்கு சாப்பிடுவதன் பலன்கள் சிலவற்றை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால், நமக்கே தெரியாத பல அற்புத நன்மைகளை நுங்கு பழங்கள் வழங்குகிறது.
சாலை ஓரங்களில் கடைகளில் கிடைக்கும் உணவு என்பதால், சுகாதாரமின்மை இருக்க கூடும்.நாம் ஏற்கனவே வாங்கிய விட சற்று கூடுதலாக சொல்கிறார்களே பேரம் பேச முடியவில்லையே என்பதற்காகவும் பலரும் இந்த நுங்கு பழங்களை வாங்கி சுவைப்பதைத் தவிர்க்கின்றனர். ஆனால் இது கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் முக்கியமான ஒன்றாகும். அதன் மருத்துவ நன்மைகளைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் அவை பின்வருமாறு.
- அம்மையைத் தடுக்கும்
நுங்கு பழங்கள் கோடை காலத்துக்கு ஏற்ற பழம். அதே சமயம் கோடைகால நோயான அம்மை நோய் பாதிக்கப்படாமல் இருக்க நுங்கு பழங்கள் மிகவும் உதவுகிறது. அம்மை நோயால் பாதித்தவர்கள் கூட நுங்கு சாப்பிடும் போது அது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்.
- கெட்ட கொழுப்பை அழிக்கும்
உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளால் தான் மாரடைப்பு, பக்கவாதம் முதலிய பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இது ரத்த ஓட்டத்தின் பாதையை அடைத்து நரம்புகளையும் செயலிழக்கச் செய்யும். அத்தகைய கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வல்லமை கொண்டது நுங்கு. அது மட்டுமின்றி, இதில் குறைந்த கலோரிகளே உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது சூப்பர் ஃபுட்.
- பசி அதிகரிக்கும்
நுங்கில் உள்ள திரவமானது பசியை தூண்டும். இதனால் பசியின்மையால் அவதிப்படுபவர்கள் கூட நுங்கை சாப்பிடலாம்.
- என்னென்ன சத்து உள்ளன
நுங்கில் வைட்டமின் பி, இரும்பு சத்து, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- மலச்சிக்கல் நீக்கும்
வயிற்று கோளாறுகளை சரி செய்ய நுங்கு நல்ல பலன்தரும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை கொடுத்த பிறகு இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்ட மலச்சிக்கல் தீரும். குடல் புண் குணமாகும். உடல் சூடு குறையும். நீர் சத்து இழப் போருக்கு இது அருமருந்து. தாகமும் தணிக்கும்.
- கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியது
கர்ப்பிணிகளுக்கு வரும் பெரும்பாலான பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து மலத்தை வெளியேற்ற கர்ப்ப காலத்தில் சிரமமாக இருக்கும். சிரமத்தால் அடிக்கடி வாயு வெளியேறி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே அத்தகைய சூழலை தவிர்க்க நுங்கு சாப்பிடலாம்.
- நீர்ச்சத்து
ரத்த சோகை இருப்பவர்கள், அனிமிக்காகவும், வீக்காகவும் இருப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வெயிலினால் ஏற்படும் நீர்ச்
சத்து குறைபாட்டை நீக்கி சோர்வை போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
- மார்பக புற்று நோய்க்கு நல்லது
நுங்கில் Anthocyanins என்ற ரசாயனம் உள்ளது. இது மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.
- தாய்ப்பால் சுரக்கும்
நுங்கை அப்படியே சாப்பிடுவதன் மூலமும் அல்லது பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை அதிகரிக்க செய்கிறது.
- எப்படி சாப்பிட வேண்டும்
இளம் நுங்கின் மேல் தோல் நீக்காமல் அப்படியே கூட பெரியவர்கள் சாப்பிடலாம். நுங்கு காலை வேளையில் சாப்பிட சிறந்தது. நன்பகலுக்குப் பின் சாப்பிட வேண்டாம் என்பது சில மருத்துவர்கள் பரிந்துரை. நுங்கு எப்போதும் பக்க விளைவுகளை உண்டு செய்யாது. நுங்கின் நீரை தடவி வர வியர்க்குரு குணமாகும். அதேபோல நுங்கை அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. காலை உணவுக்கு பின் மூன்று அல்லது நான்கு நுங்குகளை சாப்பிடலாம். நுங்குகள் பக்க விளைவுகள் அற்றது என்ற போதும் புதிய சுத்தமான நுங்கை வாங்கி சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.