ஒரு சில குழந்தைகள் பிறந்ததும் அறுவை சிகிச்சை செய்வதைக் கண்டிருப்போம். ஆனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதுவும் மூளையில் நடந்த அறுவை சிகிச்சை. யாருக்கு? எப்படி நடந்தது? அதில் இருந்த சவால்கள் என்னென்ன? என்பது பற்றி “ஸ்டிரோக்” என்ற மருத்துவத இதழின் கட்டுரையுடைய சாராம்சத்தை தற்போது சுருக்கமாக காணலாம்.

  • யாருக்கு நடந்த ஆபரேசன்?

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள டெரிக்-கென்யட்டா தம்பதி தங்களது 4-வது குழந்தையை எதிர்பார்த்து மகிழ்ச்சியில் இருந்தனர். 30-வது வார கருவுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போதுதான் குழந்தையின் மூளையில் ஏதோ தவறாக இருப்பது தெரியவந்தது.

  • என்ன பிரச்னை?

மூளையில் உள்ள கேலன் என்ற முக்கிய நரம்பு முழுமையாக வளராமல் இருந்தது. இதுதான் இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். ஆனால், அது முழு வளர்ச்சியடையாததால் இதயம் அதி வேகமாக மூளைக்கு ரத்தத்தை செலுத்தி வந்தது. இதனால் மிக அதிவேகமாக ரத்த ஓட்டத்தைப் பம்பிங் செய்து செய்து இதயமும் வீக்கம் அடைந்து போயிருந்தது.

  • சிகிச்சை அளிக்காவிட்டால் என்னவாகும்?

அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டால், மூளை இறந்துவிடும். அதனைத் தடுக்க அதற்கு தொடர்ந்து ரத்த ஓட்டம் தேவை. அதற்காக, இதயம் மிக அதிவேகத்தில் இயங்கியாக வேண்டும். பொதுவாக இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், டெரிக்-கென்யட்டா தம்பதியின் குழந்தையின் நிலை மோசமாக இருந்தது. இதனால் குழந்தை உயிரிழக்கும் அபாயமும் இருந்தது.

  • எப்படி அறுவை சிகிச்சை நடந்தது?

இரண்டு பேஷன்டுகளும் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதலில் தாய்க்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. பின் குழந்தைக்கு கருவிலேயே, அனஸ்தீசியா செலுத்தப்பட்டது. இதனால் குழந்தை ஆடாமல், அசையாமல் ஓரிடத்தில் இருக்கும். அப்படி இருந்தால்தான் அறுவை சிகிச்சை ஆபத்தின்றி முடியும். தாயின் வயிற்றில் ஊசி மூலம் கதிடர் என்ற நுண்ணிய குழாய் செலுத்தப்பட்டது. அது குழந்தையின் பின்னந்தலை வழியாக மூளைக்குள் செருகப்பட்டது. பின் கதிடர் வழியாக மருந்து செலுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நரம்பு சீரமைக்கப்பட்டது.

  • சவால்கள் என்ன?

கருவிலேயே அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் முன் இருந்த மிகப்பெரிய சவால்கள் இரண்டு. ஒன்று மூளையில் படுகாயங்கள் ஏற்படும் அபாயம். மற்றொன்று, இதயம் செயலிழக்கும் அபாயம். இந்த இரண்டு சவால்களையும் மருத்துவர்கள் சிறப்பாகவே வெற்றி கண்டனர்.

  • விளைவு என்ன ஆனது?

அறுவை சிகிச்சைக்குப் பின் உரிய நேரத்தில் குழந்தை மூளை இயக்கமும், ரத்த ஓட்டமும் சீரானது. இதயத்தின் வீக்கமும் குறைந்தது. குழந்தை ஆரோக்ய நிலைக்கு எட்டியது. சில நாட்களுக்குப் பின் 34-வது வாரத்தில் தாய்க்கு பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற ஆரோக்யமாக பிரசவமானது. பின், 2 மாதங்களாகியும் குழந்தை நல்ல ஆரோக்யத்துடன் வாழ்ந்து வருகிறது.

  • போராளி குழந்தை

நான் இந்த உலகில்தான் வாழ்வேன், என குழந்தை வைராக்யத்தோடு இருந்ததோ என்னவோ? மிகப்பெரும் போராட்டங்களைக் வெற்றிகண்டு வெற்றிகரமாக மண்ணில் உதித்த இந்த மரகதத்தை நாமும் வாழ்த்துவோம். நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள். . .

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள். . .

You may have missed

Facebook
Instagram
YOUTUBE