இதப் படிச்சா இனி நீங்க செவ்வாழைதான் வாங்குவீங்க!

சாதாரண வாழைப்பழங்களில் சத்துக்கள் அதிகம் இருக்கும்தான். ஆனால், இனி இந்தக் கட்டுரையைப் படித்த பின், வாழைப்பழம் வாங்கினால் இனி நீங்கள் செவ்வாழைதான் வாங்குவீர்கள் என்ற முடிவுக்கே வந்துவிடுவீர்கள். அதில் உள்ள பலன்கள் நீங்கள் இதுவரை கேட்டிருக்கக் கூட மாட்டீர்கள்.

பசிக்கிறதா? செவ்வாழை சாப்பிடுங்கள்

செவ்வாழைப் பழத்தில் கலோரிக்கள் அதிகம். ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து அதிகம். எனவே உடலில் எளிதில் செரித்துவிடும். இருந்தபோதும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு காலை நேர வீட்டு வேலையைத் துவங்கிப் பாருங்கள். பசியோ, சோர்வோ இருக்காது. பகல் 11 மணி ஆனால் கூட பசிக்காது. அதுவரை வயிறு நிறைந்திருப்பதாக உணரச் செய்திடும்.

  • கிட்னியில் கல் வராது

கிட்னியில் கல் ஏற்படும்போது, அதன் வலியானது பாதி பிரசவ வலிக்கு சமமாகும். செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். எனவே, தினமும் சாப்பிட்டு வர கிட்னியில் கல் சேராது. ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் கிட்னியில் கல் சேரும் பிரச்னை ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்ன வரத்தான் செய்யும். தினமும் வாழைத்தண்டு வாக்கிட வேண்டிய சூழல் அனைவருக்கும் வாய்க்காது. அதை நறுக்கும் வேலை அதிகம் இருக்கும் என பயந்தே அடிக்கடி அதனைச் சாப்பிடாதவர்கள் அதற்கு மாற்றாக செவ்வாழையை எடுத்துக் கொள்ளலாம்.

  • முகத்தில் குழிகள் மறையும்

பருக்கள் போன பின் முகம் முழுக்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவதுபோல் புள்ளிப் புள்ளிப் புள்ளியாய் தோற்றமளிக்கும். அதனை மறைக்க காஸ்ட்லியான அல்லது ரசாயனங்கள் அதிகம் உள்ள மேக்கப் அவசியமாகிறது. ஆனால், அது தினமும் சாத்தியமில்லை. எனவே, செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலுடைய உட்பகுதியை முகத்தில் வைத்து தேய்த்துக் கழுவி வர பருக்களால் ஏற்பட்ட குழிகள் மறையும்.

  • இரத்தத்தை சுத்தப்படுத்தும்

செவ்வாழைப் பழத்தில் விட்டமின் பி6 உள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அசுத்தங்களை நீக்கி, ஹீமோகுளோபினை அதிகரிக்கும். ஆனால், ரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளோர் மட்டும் செவ்வாழை மட்டுமின்றி அனைத்து வகையான வாழைப்பழங்களையும் தவிர்க்க வேண்டும்.

  • மன அழுத்தம் நீக்கும்

அதிக மன அழுத்தம் படபடப்பு இருக்கும் போது, செவ்வாழை சாப்பிடலாம். செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமானது இதயத்துடிப்பின் வேகத்தை சீராக்கும். உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். எனவே, திடீர் படபடப்பு ஏற்படும்போது, வீட்டில் செவ்வாழை இருந்தால் அதனை உடனே எடுத்துச் சாப்பிடுங்கள். உடலுக்கும், இதயத்துக்கும் இன்ஸ்டென்ட் எனர்ஜி கிடைக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள “த காரிகை”-யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE