அக்ஷய திருதியை அன்று திருமாலையும் அவரது அவதாரமான பரசுராமரையும் வணங்க வேண்டும்.

  • விரதம்

காலை முதல் விரதம் இருக்க வேண்டும். விரதத்தில் சாப்பிடக்கூடிய பொருட்கள் என்னனென்ன உள்ளனவோ அவற்றையெல்லாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். திருமாலின் புகழ் பாட வேண்டும். அல்லது அவருக்குரிய ஸ்தோத்திரங்களை கூறி வணங்க வேண்டும். திருமாலின் அவதாரமான பரசுராமனின் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

  • எப்படி வணங்குவது

ஒருவேளை விரதம் இருப்பவர்கள் கங்கையில் புனித நீராட வேண்டும். நெல் மற்றும் அரிசியோடு திருமாலை வணங்க வேண்டும். பெருமாளுக்கு தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது புகைப்படம் அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்பட வேண்டும். அதன்பின் நல்ல நேரம் பார்த்து அந்த நேரத்தில் நகை வாங்கலாம்.

  • குபேர லட்சுமி பூஜை

செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். ஆனால் இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வழங்கியதாக சொல்லப்படுகிறது. லட்சுமி தந்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். எனவே அக்ஷய திருதியை அன்று குபேர லட்சுமி பூஜை வீட்டில் நடத்தினால் சிறப்பு. அதிலும் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரனின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரம் வைத்து வணங்கப்பட வேண்டுமாம்.

  • புனித நீராடல்

கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, தாமிரபரணி, போன்ற புனித நதிகளை வணங்கி நீராடலாம். மானோசரோவரம் புஷ்கரம் கௌரிகுண்டம் ஆகிய புனித தடாகங்களையும் நேரில் சென்றோ, மானசீகமாகவோ வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தருமாம்

  • யாருக்கு உதவ வேண்டும்?

அக்ஷய திரிதியை அன்று தானம், கொடையளித்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தானம், தர்மம், உதவிகள் செய்ய பலன் அதிகம் கிட்டும் என நம்பப்படுகிறது

  • விக்ரக பூஜை

வீட்டில் உள்ள சாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத் திருவுருவங்களுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். குறிப்பாக பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து,சந்தனக்கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபடலாம். இது உடலில் வெப்பம் தொடர்பான நோய்கள் இருந்தால் அதனை போக்கும் என நம்பப்படுகிறது.

  • அக்ஷய திருதியை என்று எந்தெந்த ஆலயங்களுக்கு செல்லலாம்

அக்ஷய திருதியை அன்று வழிபடவே ஒரு சில கோவில்கள் சிறப்புமிக்கவையாக கருதப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் அக்ஷய திருதியை தினத்தன்று புனித நீராட நல்ல பலன் கிட்டும் என நம்பப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாளை இந்த நாளில் தரிசனம் தரிசிக்கலாம்.

திருச்சி மாவட்டம் வெள்ளூரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்காமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள 16 பெருமாள்களும், அவர்களின் அவதாரங்களும் உள்ள கோவிலில் ஒருசேர தரிசனம் தரும் இடத்துக்கு சென்று வழிபடலாம்.

சேலம் மாவட்டம் எட்டி கோட்டைமேட்டில் உள்ள 16 லட்சுமி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்ட லக்ஷ்மி திருக்கோவிலில் வழிபாடு செய்யலாம். அங்கு சிறப்பு பூஜை, சிறப்பு அன்னதானம், திருக்கோவில் வரும் சுமங்கலி பெண்களுக்கும் மங்களப் பொருள் உள்ளிட்டவை வழங்கப்படும்.அந்த பிரசாதங்களை பெற்று வரலாம்.

இதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள “த காரிகை“-யின் சமூக வலைதளப் பக்கங்களையும் பின் தொடருங்கள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE