இது பண்ணாம அக்ஷய திருதியைக்கு நகை வாங்கினால் சேராது

அக்ஷய திருதியை அன்று நகை வாங்க ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அதை விடுத்து வெறுமனே பணம் செலுத்தி லட்சுமி படம் போட்ட ஒரு தங்க நாணயத்தையோ, நகையையோ வாங்கி வீட்டில் வைத்து விட்டால் மட்டும் அந்த வருடம் முழுக்க பொன்னும் பொருளும் சேரும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் தர முடியாது.

நகை வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்?

நகை வாங்கும் போது “பெருமாளே” என வணங்க வேண்டும். திருமாலின் பெயரைச் சொல்லி தானங்கள் நன்கொடைகள் வழங்குவதாக வேண்டிக் கொள்ள வேண்டும். நகையை கையில் வாங்கும் போது “அக்ஷய” என சொல்லி வாங்க வேண்டும். அதாவது மென்மேலும் பெருகட்டும் என்ற சமஸ்கிருத பொருள் இது தரும்.

  • வேறு என்னென்ன வாங்கலாம்?

அக்ஷய திருதியை என்பது கிடைக்கும் பொருள் மென்மேலும் பெருகட்டும் என்ற நம்பிக்கையில் வாங்குவதாகும். எனவே, அந்த நாளில் தங்கம் மட்டுமின்றி வெள்ளியும் வாங்கலாம். வெள்ளி வாங்கினால் சரும நோய்கள் தீரும். மனக்குழப்பம் குறையும். நிம்மதி இன்மை விட்டுப் போகும் என்று நம்பப்படுகிறது. அதுவே தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிகக் குறுகிய காலத்தில் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. வைரம் வாங்குவதும் நன்மையே தரும்.

  • பிளாட்டினம் வாங்கிப் பலனில்லை

பிளாட்டினத்திற்கு தெய்வீக சக்திகள் எதுவும் இருப்பதாக கூறப்படுவதில்லை. எனவே அதனை வாங்குவதால் பலன் இருப்பதாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேபோல் நிலம் சொத்து வீடு வாகனம் வாங்கலாம்.

  • வேறு என்னென்ன செய்யலாம்?

இறைவனை பாராயணம் செய்யலாம். தவம் செய்யலாம். கொடைகள் வழங்கலாம். சடங்கு ரீதியான முழுக்கு போடலாம். நீண்ட நாட்களாக யோசித்து வைத்த நல்ல செயல் திட்டங்களை இன்றைய தினம் நிறைவேற்றலாம். புது கணக்கு தொடங்கலாம்.

  • என்னென்ன தானம் செய்ய வேண்டும்?

அக்ஷய திருதியை நாட்களில் பொருட்களை வாங்குவது மட்டுமின்றி திருமாலின் பெயர் சொல்லி தானங்களும் செய்ய வேண்டும். அக்ஷய திருதி அன்று ஏழைகளுக்கு தயிர் சாதம் தானமாக வழங்கலாம், அவ்வாறு செய்யும்போது, 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழி வகுக்கும் என நம்பப்படுகிறது. ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியவர்களுக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் உள்ளட்டவை பல்வேறு பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும் என நம்பப்படுகிறது. அக்ஷய திருதியை அன்று கொடை அளித்தல் நல்ல பலனை தரும். குறிப்பாக, விசிறி, அரிசி, நெய், சர்க்கரை, காய்கறி, புளி, பழம், துணிகள், வெள்ளி, தங்கம், உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கலாம். நம்மிடம் கடன் வாங்கி மிகவும் சிரமத்தில் உள்ளவர்கள், திருப்பித் தர இயலாதவர்களுக்கு அந்தக் கடனைத் தள்ளுபடி செய்யலாம்.

இது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள “த காரிகையின்“ சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE