ஒரு நாள் கொண்டாட்டமான அக்ஷய திருதியை இந்துக்களாலும் சமணர்களாலும் கொண்டாடப்படுகிறது.

சித்திரை வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கிரதயுகம் பிரம்மனால் படைக்கப்பட்டதாம். இந்த நாளையே அக்ஷய திருதியை என அழைக்கின்றனர். அக்ஷய திருதியை அன்று காக்கும் கடவுளான திருமாலை வணங்கி செய்யும் காரியங்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. கோவா மற்றும் கொங்கனை மையமாக கொண்ட பரசுராமரின் பிறந்த நாளாகவும் இந்த நாள் பார்க்கப்படுகிறது. பகிரதன் தவம் செய்து சொர்க்கத்திலிருந்து கங்கை நதியை பூமிக்கு வர வைத்த நாளாகவும் இது பார்க்கப்படுகிறது.

  • பொருள் என்ன?

அக்ஷயா என்றால் எப்போதும் குறையாதது என்று பொருள். ஜோதிடத்தின்படி மூன்று பௌர்ணமிகள் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. ஒன்று சித்திரை முதல் திதி புது வருட துவக்கம். இரண்டாவது ஆவணி வளர்பிறை பத்தாம் தேதி விஜயதசமி. மூன்றாவது வைகாசி மாத வளர்பிறையின் மூன்றாம் தேதி அட்சய திருதி எனக் கூறப்படுகிறது. அதுவும் ரோகிணி நட்சத்திர நாளில் அக்ஷ்ய திருதியை வருவது மேலும் சிறப்பாக மங்களகரமானதாக கருதப்படுகிறது.

  • இந்நாளில் நடந்தவை என்ன?

வேத வியாசர் மகாபாரத மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுத சொன்ன நாள்.

திருமாலின் அவதாரமான பரசுராமனின் பிறந்த நாள். கோவாவும் கொங்கண்-ம் அவரது புனித சேத்திரங்களாக கருதப்படுகிறது.

காசியில் அன்னபூரணி இடமிருந்து சிவபெருமான் தனது பிச்சை பாத்திரம் நிரம்பும் அளவு உணவு பெற்றது அக்ஷய திருதியை அன்றுதான்

பாஞ்சாலியின் மானம் காக்க கிருஷ்ண பெருமாள் “அக்ஷய” என கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் இதன் பெருமையாக கருதப்படுகிறது.

வங்காளத்தில் கொண்டாடப்படும் அல்கதா எனப்படும் அக்ஷய திருதியை விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புனிதக் கணக்கு தொடங்கும் நாளாக கருதப்படுகிறது.

ஜாட் எனப்படும் விவசாய சமூகத்தினர் இந்த நாளில் மண்வெட்டியுடன் நிலத்துக்கு செல்லும்போது எதிர்வரும் விலங்குகளும் பறவைகளும் அந்த நடவு, அறுவடையின் மழை மற்றும் பயிர்களின் விளைச்சல்களுக்கு அறிகுறிகளாக கருதப்படும்.

  • பொருட்கள் வாங்குவதன் நம்பிக்கை

இந்த நாளில் நீண்ட கால சொத்துக்கள் தங்கம், வெள்ளி, நிலம், வீடு உள்ளிட்ட பொருட்களை வாங்குவது மென்மேலும் பெருகும் என நம்பப்படுகிறது. ஆனால் நேரடியாக சென்று கடையில் பணம் கொடுத்து பொருளை வாங்கி வந்தால் மட்டும் இவ்வாறு சேராது. அதற்கென சில வழிபாட்டு விதிமுறைகள் உள்ளன. அவற்றை செய்யாது தங்கம் வாங்கினாலும் புது கணக்கு தொடங்கினாலும் தொழில் பெறும் என்ற நம்பிக்கையில் நீண்ட கால முடிவுகளை நிறைவேற்றினாலும் கூட அது நாட்டாமை படத்தில் வரும் செல்லாது செல்லாது என்ற வார்த்தை தான் அடங்கும் என நம்பப்படுகிறது. அப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை “The Karigai“யின் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE