பல முறை பெங்களூரு போயும் இத மிஸ் பண்டோமே!

பல முறை சென்றாலும், பெங்களூரு நகருக்கும், ஷாப்பிங் மாலுக்கும், பூங்காக்களும் சென்றுவிட்டு திரும்பியிருப்பீர்கள். ஆனால், ஆச்சரியம் தரும் அழகு பொதிந்த அட்வென்சுரஸ் பயணங்கள் இங்கு அதிகமாக உள்ளது. அத்தகைய ஹிட்டன் ஜெம்ஸ் எனப்படும் மறைந்துகிடக்கும் ரத்தினங்களைக் காணலாம்.

இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படுவது பெங்களூரு. ஆனால், இதமான காலநிலைக்கு ஏற்ப அங்கு சுற்றுலாவும், இயற்கை அழகும் கொட்டிக் கிடக்கின்றன. ஷாப்பிங் ஸ்ட்ரீட்ஸ், கண்கவர் சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல. அதனைச் சுற்றியுள்ள அழகிய மலைப்பிரதேசங்களின் தொகுப்பு இதோ. . .

  • நந்தி ஹில்ஸ்
Nandi Hills

பெங்களூருவில் இருந்து 60 கி.மீ.-ல் உள்ளது. ஒரே நாளில் சுற்றுலா சென்று திரும்ப ஏற்ற இடம் நந்தி துர்கா எனப்படும் மிகவும் அழகிய மலைப்பகுதியாகும். சொர்க்கத்தின் வாசல்படி என்ற பாடல் வரிகள் இந்த இடத்துக்குப் பொருந்தும். அமைதியான சூழல், அழகிய, நன்கு பராமரிக்கப்பட்ட சாலை ஆகியவை இந்த இடத்தை அடையும் சாத்தியங்களை அழகாக்குகிறது. அழகிய பறவைகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை ட்ரெக்கிங் மூலம் கண்டு ரசிக்கலாம். இங்கு, திப்புசுல்தானின் காலத்திய கோடை காலக் கோட்டை, அரண்மனை, ஆயிரமாண்டு பழமையான சிவன் கோவில், ரகசிய வழிகள் உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

  • ராமநகரா
Ramanagara

பெங்களூருவில் இருந்து 50 கி.மீ.,ல் உள்ளது ராமநகரா. கரடுமுரடான தரிசு நிலப்பரப்புடன் கிரானைட் பாறைகளால் ஆனது. இது, ட்ரெக்கிங் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த தலமாகும். சவாலான பாறைகள், மலைகள், பசுமையான சுற்றுவட்டாரங்களுக்கு நடுவில் உள்ளது. பெங்களூரு மக்களின் பிரபலமான வார விடுமுறைத் தலம் இதுவாகும்.

  • முத்தால மடுவு

இயற்கை அழகு சார்ந்த இடம் இது. அடர்ந்த காடு, மயக்கும் நீர் வீழ்ச்சிகள், பல தரப்பட்ட தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்டது முத்தால மடுவு. இது பெங்களூருவில் இருந்த 40 கி.மீ., தொலைவிலேயே அமைந்துள்ளது. இயற்கையோடு இணைந்து பொழுதைக் கழிக்க ஏற்ற இடம் இதுவாகும்.

  • சவுந்துர்கா

பெங்களூருவில் இருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ளது. இது கடல்மட்டத்தில் இருந்து 1226 மீட்டர் உயரத்தில் உள்ளது. சவுந்துர்கா ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஒற்றைக்கல் மலை என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், ஆம். அது உண்மை தான். அரிய வகை கிரானைட், லேட்டரைட் உள்ளிட்ட கனிமங்களால் ஆனது. இங்கு சென்றால் அர்காவதி ஆற்றில் உயரமான கயிற்றில் பயணித்தபடி அழகை திரில்லோடு ரசிக்கலாம். ராக்பெல்லிங், கேவிங், கயாக்கிங் உள்ளிட்ட சாகசங்களுக்கு ஏற்ற இடமாக இது உள்ளது.

  • கனகபுரா

பெங்களூருவில் இருந்தது 61 கி.மீ., தொலைவில் உள்ளது கனகபுரா. பாரம்பரியமும், கலாச்சாரமும் நிறைந்தது கனகபுரா. இது, பசுமையும் நீர்வீழ்ச்சியும் நிறைந்த தலம் இது. நகரத்தின் சலசலப்புக்கு மத்தியில் இருந்து நீரோடையின் சலசலைப்பை காதில் அமைதியாகக் கேட்டு ரசித்தபடி படுத்திட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆண்டு முழுவதும் இதமான வானிலை இங்கு நிலவுகிறது. எனவே, இங்கு கோடை விடுமுறை மட்டும் இன்றி அனைத்து காலங்களிலும் பயணிக்கலாம்.

  • ஜோக் அருவி

இது கர்நாடகத்தின் சிமோகா மாவட்டத்தில் உள்ளது. ஆனால், பெங்களூருவில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ளது. சரவதி நதியின் நீர்வீழ்ச்சியான இது 829 அடி உயரம் கொண்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

த காரிகை“-யின் இந்த சுற்றுலாப் பட்டியலை உங்களது குடும்பம் அல்லது நண்பர்கள் குழுவுக்கு அனுப்பி உடனே அடுத்த ட்ரிப்ப பிளேன் பண்ணுங்க. . . பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE