வெறும் வயித்துல எது சாப்பிட்டா சுகர் குறையும்?
சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிடும் உணவு அவர்கள் ரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரிக்கும். அதை உணராது காபி, டீ உள்ளிட்டவற்றை சர்க்கரை போட்டு குடித்தால் அது மிகப்பெரிய ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.
ஹார்ட் அட்டேக், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, டயாலிசிஸ் தொடங்கி உயிரிழப்பு வரை பேராபத்துக்கள் அதன் மூலம் விளையக் கூடும் ஆனால் நாள் முழுவதும் கடைபிடிக்காவிட்டாலும் ஒரு சில பொருட்களை அதிகாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது சர்க்கரை அளவு, அதிசயிக்கத்தக்க வகையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்
- இலவங்கப்பட்டை தண்ணீர்
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இலவங்கப்பட்டைக்கு முக்கிய பங்கு உள்ளது. இரவு தூங்கும் முன், சிறிதளவு இலவங்கப்பட்டையை எடுத்து நீரில் ஊறவைக்கலாம். இலவங்க பட்டை தண்ணீரை குடிக்கலாம். அல்லது மூலிகை தேநீர் தயாரிக்கவும் அந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.
- நெய் மற்றும் மஞ்சள்
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் நெய் எடுத்துக் கொண்டால் சர்க்கரை மீதான ஆர்வம் குறைவதாக கூறப்படுகிறது. அதிலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்த மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடும்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், உங்களுக்கு அதிக கொழுப்பு, இருதயப் பிரச்னை இருந்தால் இதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
- நெல்லிக்காய் ஜூஸ்
பெரிய நெல்லிக்காயை வெறும் தண்ணீருடன் அரைத்து அந்த சாற்றைப் பருக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். குறைந்தபட்சம் 30 மில்லியாவது ஆம்லா சாறு குடிப்பது, சர்க்கரை நோய்க்கு எதிராக மிக அரிய இயற்கை மருந்தாக பார்க்கப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை பருகும் போதும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
- ஊற வைத்த நட்ஸ்
காலையில் பரிசோதனை செய்யும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அடுத்த சில நாட்களுக்கு இதை கடைபிடியுங்கள். இரவு உறங்கும் முன் பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களை ஊற வைக்கவும். மறுநாள், தோலுரித்து அதனை சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவு குறைவாகும்.
- வெந்தயம்
இது பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தெரிந்ததே. வெந்தய விதைகளை இரவில் ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் அதனை சாப்பிடலாம். ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம். இது ரத்த சர்க்கரை அளவை வெகுவாக கட்டுப்பாட்டில் வைக்கும் என நம்பப்படுகிறது. தண்ணீரைப் பருக விரும்புபவர்கள் ஊற வைக்கும் முன் வெந்தய விதைகளை அலசி கொள்வது நல்லது.
- மிளகு
மிளகு என்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் மிளகை சாப்பிட ரத்த சர்க்கரையளவு வெகுவாக குறைகிறது. இதனால்தான் என்னவோ, 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும், விருந்து சாப்பிடலாம் என பெரியவர்கள் கூறிச் சென்றனர்.
- தண்ணீர்
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இருப்பது எப்போதும் நல்லது. வெறும் வயிற்றில் தண்ணீர் பரவுவது சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீர் மூலம் சர்க்கரை வெளியேற்றப்பட தண்ணீர் பருகுவது மிகவும் அவசியமாகும்.
- இஞ்சி
இஞ்சியில் நீரிழிவு எதிர்ப்பு திறன் உள்ளது. குறிப்பாக அதில் ஹைபோலிபிடெமிக் என்ற சத்தும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளது. எனவே இது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி டீ பருகுவதும், உணவுக்குப் பின் பருகுவதும் சர்க்கரை அளவை குறைக்கும் என நம்பப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்து பயன்பெற ”The Karigai“-யிள் சமூக வலைதளங்களையும் பின்தொடருங்கள்.