அடேங்கப்பா! வெறும் தண்ணிய குடிச்சா இவ்ளோ நன்மையா?

தினமும் காலை ஒரு கிளாஸ் நீர் பருகுவது உடலுக்கு நல்லது என அனைவரும் அறிந்ததே. ஆனால் உடலுக்கு என்னவெல்லாம் நன்மை தரும் என்ற ஆச்சரியமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

செரிமான குடல் ஆரோக்யம் ஆகட்டும், மன நலன் ஆகட்டும் போதிய அளவு நீர் சத்து உடலில் இருந்தால் அவை மிகவும் ஆரோக்கியமாக இருக்குமாம். தினமும் காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பதோடு உங்களை அமைதியாகவும் வைத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி உள்ள ஏராளமான நன்மைகள் பின்வருமாறு

  • மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்

வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரை காலை நேரத்தில் குடித்தால் உடலில் மெட்டபாலிசத்தை இது கிக்-ஸ்டார்ட் செய்ய வைக்கும். இதை எடுத்து செரிமானம் பிரச்சனை இன்றி சீராக அமையும்.

  • உடல் எடை குறைக்கலாம்

பசியாக இருக்கும் போதெல்லாம் தேவையில்லாத நொறுக்கு தீனிகளை தவிர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இது வயிறு நிரம்பியதாக உணரச் செய்யும். அதுமட்டுமின்றி நாள் முழுவதும் நீர்ச்சத்தோடு இருக்க வைக்கும். இது “பசியாக இல்லை” என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும். இதன் மூலம், தேவையற்ற உணவுப் பொருட்களை வயிற்றுக்குள் குப்பை போல் தள்ளுவதை விடுத்து உடல் எடை குறையும்.

  • மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கும் போது, பிரெய்ன் ஃபாக் (Brain Fog) என்ற சிந்திப்பு தன்மையை குறைக்கும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கவனம் செலுத்த இயலாமை, குறிப்பிட்ட வார்த்தைகளை கோர்த்து வாக்கியத்தை அமைக்க இயலாமை, அறிவாற்றல் செயலிழப்பு, மனச்சோர்வு உள்ளிட்டவற்றை நீக்கும். ஞாபகசக்தி கவனக் குறைவு உள்ளவற்றை மேம்படுத்தி ஒட்டுமொத்த மூளையையும் சிறப்பாக செயல்பட உதவும்.

  • எனர்ஜி லெவலை மேம்படுத்தும்

போதிய நீர் இல்லை என்றால் உடல் உறுப்புகளுக்கு போதிய ரத்தம் போகாது. நீரோட்டம் போன்று, ரத்த ஓட்டம் பாதித்தால் மயக்க நிலை ஏற்படும். மிக மிக குறைவான நீர்ச்சத்து குறைபாடு கூட உடல் மற்றும் மன செயல்பாட்டை குறைக்கும். உங்களது நாள் ப்ரொடக்ட்டிவாக (Productive ) இருக்க வேண்டும் என்றால் தினமும் காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கவும்.

  • தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தண்ணீர் பருகுவது முகம் மற்றும் தோளில் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வைப்ரண்டாக (Vibrant) இருக்க உதவும். நீர் சத்து குறைந்தால் தோல் வறட்சி, தோல் வெடிப்பு உள்ளிட்டவை ஏற்படும். எனவே தோலை இயற்கையான முறையிலேயே உள்ளிருந்து ஆரோக்கியமாக மாய்ஸ்ரைஸ் (Moisturize) செய்யவும், தோளின் மீது உள்ள சுருக்கத்தை குறைத்து வயதான தோற்றத்தை தடுக்கவும் போதிய நீர்ச்சத்து அவசியமாகிறது.

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அப்படியெனில் நீங்கள் நோய்வாய்ப்பட மாட்டீர்கள் என அர்த்தம் அல்ல. நோய் வாய்ப்பட்டாலும், மிக விரைவில் மீண்டு வருவீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.

  • எரிச்சலைக் குறைக்கும்

நீர்ச்சத்துக் குறைபாடு என்பது உடலில் எரிச்சலை அதிகரிக்கும். இந்த எரிச்சல் உடலை சீராக இயக்க விடாது. ஒரு வித அசவுகர்யமும், அதனால் உடல் இயக்க செயல்பாடு முடங்கும் நிலையும் ஏற்படும். உடலில் கை, கால் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் குடியுங்கள்.

  • நல்ல மூட் கொடுக்கும்

நீர்ச்சத்து உடலில் கொஞ்சம் குறைந்தாலும், அது காண்போரிடம் எல்லாம் எரிந்து விழச் செய்யும். தினமும் காலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும்போது, அந்த நாள் முழுவதும் உங்களை ஹேப்பியாக இருக்கச் செய்யும். காலை மட்டுபோதிய இடைவெளியில் நீர் அருந்துவதும் அவசியமாகும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE