வாட்டர் கேனா? மான்ஸ்டர் கேனா?
இருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தண்ணீர் எந்த வடிவில் கிடைக்கிறது என்றெல்லாம் மக்கள் பார்ப்பதில்லை. குடிப்பதற்கு சற்று இனிப்பான சிறுவாணி தண்ணீர் போல இறந்துவிட்டால் போதும் என எந்த பிராண்டையும் வாங்கி பருக்கி கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதன் விளைவும், விபரீதமும் அறிவதில்லை
- என்னென்ன கலக்கிறார்கள்?
கேன் வாட்டர் குடிநீரில், ஆக்டிவேட்டடு கார்பன் ஃபில்டர், சாண்ட் ஃபில்டர், ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ், மைக்ரான் ஃபில்டர், யூ.வி ட்ரீட்மென்ட் என சுத்திகரிப்பு மட்டும் 5 முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கேனில் என்னென்ன சரி பார்க்க வேண்டும்?
சுழற்சி முறையில் ஒரு குடிநீர் கேனை, 20 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றில் 80 % கீறல் இருக்கக் கூடாது.
குடிநீரை சுத்திகரித்த தேதி, காலாவதி தேதி, பேக் செய்யப்பட்ட தேதி, பேட்ச் எண் என முக்கிய விவரங்கள் லேசர் பிரின்ட் செய்யப்பட்டு கேன் மூடிப்பகுதியில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
- வேறு என்னென்ன இடம் பெற்று இருக்க வேண்டும்?
அந்த கேன் தண்ணீரைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர், ஐ.எஸ்.ஐ முத்திரை, முகவரி, BIS உரிம எண், FSSAI லைசென்ஸ் லேபிளாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முக்கியமாக, அரசு அனுமதித்த அளவில் மினரல்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?
ஆனால், பெரும்பாலான கேன் குடிநீர்த் தயாரிப்பு நிறுவனங்கள் எந்த விதியையும் கடைப்பிடிப்பதில்லை. மொத்தமுள்ள 5 சுத்திகரிப்பு முறைகளில் பெரும்பாலும் 2 முறைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. ஃபில்டர்களைக்கூட முறையாகப் பராமரிப்பதில்லை.
- விளைவு என்ன?
தண்ணீரிலிருக்கும் கிருமிகளும், நச்சுப் பொருட்களும், அப்படியே தங்கிவிடுகின்றன. மனசாட்சியே இல்லாமல், ஒரே கேனை 100-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்துகிறார்கள். முறையற்ற சுத்திகரிப்பு, சரியான ஃபில்டர் முறைகளைக் கடைப்பிடிக்காதததால், கேன் தண்ணீரில் 100-க்கும் கீழ்தான்
TDS அளவு இருக்கிறது.
- கேன்கள் பராமரிப்பும். . உடல் உபாதைகளும். .
நச்சு பொருட்கள் இருப்பதையோ கேன்கள் பராமரிக்க படாமல் இருப்பதையோ பற்றியெல்லாம் குடிநீர் நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. கேனை மேலோட்டமாகக் கழுவிவிட்டு, தண்ணீரை அடைத்து விற்கிறார்கள். மேலும் குடிநீரில் போதுமான மினரல்கள் இல்லாததால், சிறுநீரகப் பிரச்னை உள்பட, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
- அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?
சென்னை மாதவரம் பகுதியைச் சுற்றி
அதிகமான கேன் குடிநீர் ஆலைகள் இயங்கும். பெரும்பாலான நிறுவனங்களின் FSSAI உரிமம் காலாவதியாகிவிட்டது. நிறுவனங்களை நடத்துபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது, ஆய்வு நடத்தி சீல் வைப்பது, என எதையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாதத்துக்கு சுமார் ரூ.100 கோடி
குடிநீர் கேன் நிறுவனங்கள் மீது புகார் எழுந்தால், பெயரளவுக்கு ஆய்வு நடத்திவிட்டு வெறும் 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதோடு அதிகாரிகள் அமைதியாகிவிடுகின்றனர். நாளொன்றுக்கு, 2 கோடி லிட்டர் கேன் தண்ணீர் புழங்கும் சென்னை. மாதத்துக்குச் சுமார் 100 கோடி ரூபாய் வரை குடிநீர் வர்த்தகம் நடக்கிறது. இவ்வளவு பெரிய பணம் புரளும் தொழிலில், முறைகேடுகளை அதிகாரிகள் முறைப்படுத்தி மக்களின் நலனை காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.