செடிகள் கதறுவது கேட்குதாம்! அதிர்ச்சிதரும் ஆய்வு!

Plants Cry Recording

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வின்படி, செடிகள் மன அழுத்தத்தில் இருக்கும் போது அது அழுகிறதாம்.

உலகைப் புரட்டிப் போடும் ஒரு கண்டுபிடிப்பை தாவரவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செடி, கொடி, மரங்களுக்கும் உயிர் உள்ளது என ஏற்கெனவே பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டறிந்துள்ளனர். போதிய சூரிய ஒளியோ, நீரோ, காற்றோட்டமோ இல்லாத போதும், சத்துக்கள் பத்தாத போதும் செடிகள் உயிரிழக்கின்றன. அது காய்ந்து கருகிப் போய், பட்டுப் போய்விடும் என அனைவரும் அறிந்ததே. இதில் ஆய்வுகள் ஏதும் புதிதாக விளக்க வேண்டியதில்லை.

ஆனால், தற்போதைய புதிய ஆய்வானது இதுவரை நடந்த ஆய்வுகளுக்கெல்லாம் “கிங்” ஆக அமைந்துள்ளது. அதுதான், செடிகள் மன அழுத்தத்தில் இருக்கும் போது அது அழுவதாகவும், கதறித் துடிப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  • கண்டுபிடித்தது எப்படி?

அல்ட்ரோசானிக் மைக்ரோஃபோன்களைக் கொண்டு செடிகளை ஆய்வு செய்தனர். அதில் தக்காளி மற்றும் கஞ்சா செடி ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது. செடிகளை வெட்டும்போதோ, காயம் ஏற்படும்போதோ, பூச்சி அல்லது நோய்தாக்குதல் ஏற்படும் போதோ அது ஒரு வித அதிர்வுகளை வெளிப்படுத்தியதைக் கண்டனர். அந்த வைப்ரேசனைக் கண்டறிய அல்ட்ரோசானிக் மைக்ரோஃபோன்களை அதன் அருகே வைத்தனர்.

  • அல்ட்ரோசோனிக் மைக்ரோஃபோன் எப்படி வேலைசெய்யும்?

சாதாரண ஒரு மனிதன் தனது காதுகளால், 16 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான சத்தம் தான் கேட்க முடியும். செடிகளில் இருந்து 10 சென்டிமீட்டர் தொலைவில் அல்ட்ரோசோனிக் மைக்ரோஃபோன்கள் இரண்டு வைக்கப்பட்டன. இதன் ஃப்ரீக்வென்சிகள் 20-லிருந்து 250 கிலோஹெர்ட்ஸ் அளவிலான சத்தங்களைக் கூட கேட்க முடியுமாம்.

  • சத்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன

செடிகளில் இருந்து வெளியேறும் அதிர்வுகள், அல்ட்ரோசோனிக் மைக்ரோஃபோன்களில் பதிவு செய்யப்பட்டன. பின், அது AI என்ற ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பம் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் தனித்துவ சத்தங்கள் லேயர் லேயராக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

  • மனிதர்களைப் போன்றே சத்தங்கள் இன்றி வாழாதாம் செடிகள்

செடிகளும், மனிதர்களைப் போன்றே சத்தங்கள் போட்டபடியே தான் தினம் தோறும் வாழ்வைக் கழிக்கின்றன. அதிலும் குறிப்பாக, அவற்றின் சத்தங்கள் சந்தோஷமான நேரங்களில் எல்லாம் வருவதில்லை. ஆனால், வலிக்கும் போது, வேதனையின் போதும், அழுத்த சூழ்நிலைக்கு உள்ளாகும் போதும், காயம் படும்போதும், நீர்சத்து இல்லாமல் வறண்டு காணப்படும் போதும் இந்த சத்தங்கள் கத்தல், கதறல்களாக வெளிப்படுகின்றன.

  • வேறு யாருக்கெல்லாம் இந்த சத்தம் கேட்கும்?

செடிகள் கதறும் சத்தத்தை அறிந்துகொள்ள நமக்குத் தான் அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், வௌவால்கள், ஊர்வன உயிரினங்கள், பல வகையான பூச்சிகள், செடிகளின் கதறல்களை உணரக் கூடிய திறன்களை இயற்கையிலேயே கொண்டுள்ளதாம்.

  • இனிமேல் செடிகளை அழ வைக்காதீர்கள்

உங்களுடைய வீடுகளில் வளர்க்கும் செடிகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவைகளும் மேற்குறிப்பிட்ட சூழல்களில் கதறும். உரிய நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். போதிய ஊட்டச்சத்து மிக்க உரங்களைக் கொடுங்கள். சத்தம் கேட்பதில்லை என்பதற்காக கதறட்டும் என விட்டு விட முடியாதல்லவா?

You may have missed

Facebook
Instagram
YOUTUBE