பாண்டியன் ஸ்டோருக்கு ஏத்தவண்டி! 10 பேர்போலாம்.

பொதுவாகவே வீட்டில் அதிகம் பேர் இருக்கும் குடும்பம் ஒன்றாக ஒரே காரில் பயணிக்கும் போது மூச்சுத் திணறி விடும். அதற்கு “யாரடி நீ மோகினி” படத்தில் ஷாப்பிங் செல்ல ஒரே காரில் பயணிப்போரின் காட்சியே சிறந்த உதாரணம். அதுவும் நீண்ட தூரப் பயணம் என்றால் சொல்லவே வேண்டாம்.

  • காலையே மறக்கும் அளவு மரத்துவிடும்

ஆண்டுக்கு ஒரு முறை வெளியே ட்ரிப் செல்லும் ஆர்வக் கோளாறில், மூட்டை முடிச்சுக்களையும், பிள்ளை, குட்டிக்களையும் தூக்கி காரில் போட்டுக் கொண்டு புறப்படுவர். முதன் முறை டீக்குடிக்க காரை நிறுத்தும் போது, குழந்தைகளை மடியில் இருந்து இறக்கி விடுவார்களே?. அப்போதுதான் தாய்மார்களுக்கு கால் என்ற ஒன்று இருப்பதே நினைவுக்கு வரும். அவ்வளவுக்கு மரத்துப் போய்விடும். ஏனெனில் குழந்தைகள் சாதாரண நேரத்தில் இருப்பதைவிட தங்கள் மடியில் படுத்து உறங்கும் போது அதிகம் கணப்பர். இருப்பினும் தாய்மை அதை புன்னகைத்தபடி தாங்கும்.

  • லாங் ட்ரிப் னா சொல்லவே வேணாம்

போகும் போது நிறைய இடங்களை சுற்றிப் பார்ப்பது, புதுப்புது உணவுகளையும், ஸ்னேக்ஸ்களையும் ருசிப்பது என குஷியாக இருப்பர். வீட்டு வேலைக்கும் லீவு என்றால் சொல்லவே வேணாம். ஓரிரு நாட்கள் ஜாலியாகப் பயணிக்கும் போது கால் வலிக்குதுன்னு சொல்லக் கூட மாட்டாங்க. ஆனா, திரும்ப வரும்போது தான் வலி தெரியும். கோபமும், எரிச்சலும் தொற்றிக் கொள்ளும். இந்த மனுஷன் வேற பெரிய கார வாங்கினா தான் என்ன? என முணகும் சத்தம் அங்கு முன்னிருக்கையில் காரோட்டும் கணவனின் காதில் எட்டத்தான் செய்யும். அவரும் ஆல்ரெடி இருக்குறதே 7 ஷீட்டர் தான? இதுக்கு மேல இந்தியாவுல ஏது காரு? என நினைத்து விட்டு விடுவர்.

  • 10 ஷீட்டர் வண்டி வருதுப்பா!

ஃபோர்ஸ் நிறுவனம் சிட்டிலைன் என்ற பெயரில் 10 ஷீட்டர் வசதியுடன் கூடிய ஒரு வண்டியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஒரு பயணி அமரலாம். அதன் பின்னால் 3 பேர் அமரும் வரிசை, அதன் பின்னால் இருவர் அமரும் இருக்கைகள் உள்ளன. கடைசியாக மூவர் அமரும் இருக்கையும் உள்ளது.

  • என்னென்ன வசதிகள்

இந்த காரில் 2 பிரத்யேக ஏசி உள்ளது. அதிக நபர்களுக்கு ஏற்ப இது அனைவருக்கும் குளுமை தரும். அகலமான கதவுகள் உள்ளன. அதுவும் போதிய அளவு திறக்கும் வசதியும் உள்ளது. 3-ம் வரிசை இருக்கைகள் அதன் பின்வரிசை இருக்கையில் இருப்போர் ஏறுவதற்கு ஏற்ப மடக்கிக்கொள்ளும் வசதி உள்ளது. லக்கேஜ் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு.

  • நட்பு வட்டங்களுக்கும் ஏற்பட்டது

பெரிய குடும்பம் கொண்டவர்கள் மட்டுமல்ல. அதிக நட்பு வட்டத்துக்கு ஏற்பவும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்றாக ஒரே காரில் அரட்டை அடித்த படியே பயணிக்கும் வகையில் இந்த கார் அமைந்துள்ளது. இந்திய சந்தை பெரும் குடும்பங்களை கொண்டது என்பதால் இங்கு தங்களது காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த காரை அதன் நிறுவனம் களமிறக்கி உள்ளதாம்.

  • பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும்

எது எப்படியோ, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல கூட பெரிய கார் வாங்கனும்-னு சொன்னாங்கள்ல? அவுகளுக்கு இந்த காரப் பத்தி அனுப்பியுடுங்க. . பாவம் ஒரு குட்டி கார வெச்சுகிட்டு குடும்பமே சண்டைகட்டி பிரிஞ்சுடுச்சு. . . அதே போல இதுமாதிரி தகவல்கள தெரிஞ்சுக்க அடிக்கடி நம்ம “The Karigai” பக்கம் வந்துட்டு போங்க. .

You may have missed

Facebook
Instagram
YOUTUBE