தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு என்னென்ன பலன் தெரியுமா?
தாய்ப்பால் குடிப்பதால் ஒரு குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளான ஆன்டி பாடிகள் அதிகரிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு தாய்ப்பால் தரும் தாய்க்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை இதில் பார்க்கலாம்.
- தாய் – சேய் பிணைப்பு அதிகரிக்கும்
- பேறு காலத்துக்குப் பின் எடை கூடுவது தவிர்க்கப்படும்
- முதல் 6 மாதம் புதிய கரு உருவாகும் வாய்ப்பு 98% குறையும்
- கருப்பை, மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு குறையும்
- சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறையும்
இந்த நன்மைகளை உணர்ந்ததால் தான் குழந்தைகளுக்கான தாய்ப்பால் கொடுப்பதில் மேலை நாடுகளைவிட இந்தியா முன்னணியில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்களில் 33 மாதங்களும், நகர்ப்புறங்களில் 25 மாதங்களும் சராசரியாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டப்படுவதும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.