அடம்பிடிக்கும் குழந்தைகளை ஜாலியா படிக்க வைப்பது எப்படி?
படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை அழைத்து அன்புடன் கொஞ்சுங்கள். இருவரும் சேர்ந்து படிக்கலாம் எனவும், ஒவ்வொரு சப்ஜெக்ட்-க்கும் ஒரு கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை வைத்து அழைக்கலாம் என்றும் கூறுங்கள். உதாரணமாக ஸ்பைடர் மேனுக்கு கணக்கு பாடம், பார்பி கேர்ளுக்கு ஆங்கிலப் பாடம் எனக் கூறலாம். “பட்டுச் செல்லம் பார்பி பாடம் முடிச்சாச்சா?” எனக் கேட்டால் அவர்களும் ஆர்வத்துடன் ஹோம்வொர்க் செய்வர். தங்கள் நண்பர்களுக்கும் இந்த முறையை பரப்புவர். இனி வீட்டுப்பாடம் ஒரு சுமையாகவே தெரியாமல் ஜாலியாக மாறிவிடும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு பாடத்துக்கும் அலாரம் வைத்து, அதற்கு முன்பே முடித்தால் முத்தம், ஹக், ஹைஃபை உள்ளிட்ட பாசப் பரிசுகளை வழங்கியும் ஊக்குவிக்கலாம்