1400 குழந்தைகளுக்கு தாய்பால் வழங்கி சாதனை படைத்த பட்டதாரி பெண்

தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்பார்கள். ஆனால் அந்த ரத்தத்தை உருக்கி குழந்தைகளுக்கு பெருங்கொடையாக வழங்கும் தாய் பாலை, இளம்பெண் ஒருவர் தானமாக வழங்கி சத்தமே இல்லாமல் சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த 29 வயது பட்டதாரியான சிந்து மோனிகா என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர். கடந்த ஆண்டு சிந்த மோனிகாவிற்கு குழந்தை பிறந்ததையடுத்த, கிட்டதட்ட 16 மாதங்களாக தாய் பால் தானத்தை செய்து வருகிறார். அதில் முதல் 7 மாதங்களில் மட்டும் சுமார் 1400 பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்க 42 லிட்டர் தாய்பாலை அவர் தானம் வழங்கி, ஏசியன் புன் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்காட்சில் இடம் பிடித்த சாதனை படைத்திருக்கிறார்.

இந்த சாதனையை அறிந்த நமது காரிகை குழுவினர், சிந்து மோனிகாவை தொடர்ப்பு கொண்ட போது, தனது சாதனை பயணத்தின் நோக்கத்தை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார். கருவுற்ற புதிதில் மகப்பேறு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், அச்சங்களும் என்னுள் எழுந்தன. அந்த சந்தேகங்களுக்கு விடை தேடி கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டேன்.

அங்கு தான் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொண்டேன். அம்மாவை இழந்த குழந்தைகளுக்கான தாய்பாலின் தேவை எவ்வளவு இன்றியமையாதது என்பதை, ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு கண்ட அவலங்களை பார்க்கும்போது அறிந்துக் கொண்டேன்.

பிறகு தாய் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கும், சரிவர தாய்பால் சுரக்காமல் தான் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் இன்றி தவிக்கும் இளம் தாய்மார்களுக்கு உதவும் வகையில் சில தொண்டு நிறுவனகள் செயல்படுவதை அறிந்து கொண்டேன். இன்ஸ்டாகிராம் மூலம் ‘அமிர்தம்’ என்ற தன்னார்வ குழு ஒன்று தாய்பாலின் மகத்துவம் மற்றும் தாய்பால் தானம் தொடர்பாக விழிப்புணர்வு செய்து வந்ததை அறிந்தேன்.

குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆன பிறகே தாய்பாலை தானம் செய்ய தொடங்கினேன். தாய்பாலை அவ்வப்போது சேகரித்து குளிர்சாதனை பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருப்பேன், வாரம் ஒரு முறை “அமிர்தம்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், சேகரித்து வைக்கப்பட்டுள்ள தாய்பாலை பெற்று சென்று தாய்பால் சேமிப்பு வங்கியில் சேர்த்துவிடுவர்.

கிட்டதட்ட 16 மாதங்களாக தாய்பால் தானம் செய்து வருகிறேன். இதுவரையில் உடல் அளவிலோ, மனதளவிளோ எந்தவிதமான சோர்வும் எனக்கு ஏற்பட்டதில்லை. தாய்பால் தானம் வழங்கி நான் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், அதற்கு மிக முக்கிய பங்கு என் கணவரையும், என் குடும்பத்தினரையுமே சேரும். அவர்களின் ஒத்துளைப்பும், உறுதுணையும் இல்லாமல் இது சாதியமாகியிருக்காது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிந்த மோனிகா.

கலாச்சாரம், பண்பாடு என்ற குறுக்கிய வட்டத்துக்குள் சுருங்கி விடாமல், ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக, வளமான தலைமுறைக்கு வித்திட்ட தாய் பாலை தானம் செய்வோம்….!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE