“படி, அதிகாரத்துக்கு வா, படிப்ப மட்டும் விட்டுற கூடாது – புதுமைப்பெண் திட்டம்

கல்வி எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைக்கிறது இல்ல. குடும்ப வறுமையால பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டவங்களும், பள்ளி படிப்ப முடிச்சுட்டு உயர் கல்விய தொடர முடியாம தவிக்குறவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. அப்படி பெருங்கனவோட தவிச்சுக்கிட்டு இருக்குற பெண்களுக்கு கைக்கொடுத்து, படிச்சு அதிகாரத்து வா, சமூகத்த மாத்துனு சொல்ற திட்டம் தான் “புதுமைப் பெண்”திட்டம்.

“மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” :
ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக 1989 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு, 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, நிதி உதவியுடன் 8 கிராம் வரை தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய பெண்கள் பயன்பெற்றனர்.

இந்த நிலையில் தான், பெண்களுக்கு தாலிக்கு தங்கமா ? அல்லது பெண்களின் உயர் கல்விக்கு உதவித்தொகையா ? என்ற விவாதத்துடன் திட்டம் மாறி அமைக்கப்பட்டுள்ளது. “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்”, தற்போது பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” கீழ் “புதுமைப் பெண்” திட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

“புதுமைப் பெண்”

தற்போதைய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுமைப் பெண் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். பள்ளி படிப்பை முடித்த பிறகு அரசுக் கல்லுரி, அரசு உதவிப்பெறும் பள்ளி, சுயநிதி கல்லுரிகளில் தங்களது உயர் கல்வியை தொடரும் மாணவிகள், https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் திட்டத்திற்கு தகுதியான மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ருபாய் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். உதவித்தொகை என்பது வீட்டில் இருந்து கல்லூரி செல்லும் மாணவிகள், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் என இளநிலை முதல் பி.எச்.டி வரை படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE