சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் சமையல் அறையில் செலவிடுவதாக கூறப்படுகிறது அதுவே குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்கள் சமையல் அறையில் இருக்கும் நேரமும் கூடுதலாகும்.

உணவகம் என்று வந்துவிட்டால் சமையல் கலைஞர்கள் தினமும் 100 முதல் 150 பேருக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை சமைக்க வேண்டி வரும். எனவே அவர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது உண்டு.

  • சமையல் மாரத்தானில் கின்னஸ்!

ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த லதா டோன்டோ என்ற பெண் அதிக நேரம் சமைத்து சமையல் மாரத்தானில் 2019 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார். இதனை முறியடிக்க நைஜீரிய சமையல் கலைஞர் ஹில்டா பாசி என்ற 27 வயது பெண் கடுமையாக பயிற்சி எடுத்தார்.

  • கடும் பயிற்சி எடுத்தார் ஹில்டா

இதற்காக 5 ஆண்டுகள் பயிற்சி எடுத்தார் ஹில்டா. கடந்த சில மாதங்களில் 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்து தனது வாழ்வியல் முறையை மாற்றி அமைத்துள்ளார். கடும் பயிற்சிக்குப் பின் இப்போட்டியில் பங்கு எடுப்பது பற்றி இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

  • ஆப்பிரிக்க பெண்களுக்கு சமர்ப்பணம்

3 நாட்கள் தனிநபராக அதிக நேரம் சமைக்கும் கின்னஸ் உலக சாதனையை முயற்சிக்க இருப்பதாக ஹில்டா கூறினார். இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இதில் பெறும் சாதனையை ஆப்பிரிக்க பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.ஹில்டாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோ ஹில்டாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

  • 87 மணி நேரம் 110 உணவு

87 மணி நேரம் 46 நிமிடங்கள் அதாவது மூன்றரை நாட்கள் இடைவிடாமல் தொடர்ந்து சமைத்தார்.பெரும்பாலும் நைஜீரிய வகை உணவுகளை கொண்ட அவர் சமையல் மாரத்தானில் 110 வகையான உணவுகள் சமைக்கப்பட்டு இருந்தன. தன்னந்தனியாக மூன்றரை நாட்களில் 110 உணவை சமைத்து இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

  • கடின உழைப்பு

தொடர்ந்து உறக்கம் இன்றி அரும்பாடு பட்டு இத்தகைய உணவு வகைகளை சமைத்து அசத்தியுள்ளார். படைப்பாற்றல், இடைவிடாப் பயிற்சி உள்ளிட்டவற்றை கொண்டு இதனை சாதித்த திறன்மிக்க பெண்மணி ஹில்டாவை “த காரிகை”யும் வாழ்த்துகிறது. நீங்களும் இந்த சாதனைப் பெண்மணிக்கான உங்களது வாழ்த்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

இது போன்ற அப்டேட்டுகளை அடிக்கடி தெரிந்துகொள்ள “த காரிகை”-யின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE