வாழ்க்கையில் உயர வேண்டும் என்று மிகவும் ஆழமாக நம்பினீர்கள் என்றால் அது நிச்சயம் நடக்கும். அதை நீங்கள் எவ்வளவு ஆழமாக நினைக்கிறீர்கள்? அதற்காக தினமும் எவ்வளவு உழைக்கிறீர்கள்? என்பதை பொறுத்து கடின உழைப்பு உங்களை உச்சத்தில் கொண்டு சென்று அமரவைக்கு அழகு பார்க்கும். இது பலரும் தங்களது வாழ்விலோ அல்லது தங்களை சுற்றி உள்ளோர் என் வாழ்விலோ கண்கூடாக கண்ட ஒரு உண்மையாகும்.

கடின உழைப்பிலும் வெற்றியை நோக்கிய பயணத்திலும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாமல் உச்சம் தொட த காரிகை உங்களுக்கு வாழ்த்துகிறது. தற்போது எந்த பிரபலம் மிகவும் அடித்தட்டில் இருந்து முன்னேறி உள்ளார் என்பதை பார்ப்போம்.

அது பிரபல தோசை மற்றும் இட்லி மாவு நிறுவனமும் ஷாப்பிங்மார்களில் தோசை இட்லி உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் நிறுவனமான ID ஃப்ரெஷ் ஃபுட்ஸ்.

இதன் நிறுவனத் தலைவர் பி சி முஸ்தபாவின் வாழ்க்கையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர் இவர். இவரது தந்தை விவசாயக் கூலி தொழிலாளி ஆறாம் வகுப்பில் ஃபெயிலானதால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தந்தையோடு சேர்ந்து விவசாய பணிகளுக்கு வேலைக்கு சென்று வந்தார் முஸ்தபா. அப்போது அவருடைய ஒருநாள் வருமானம் ரூ.10 மட்டும் தான்.

குடும்பம் மிகவும் வறுமையில் சிரமப்பட்டது. சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கும் சூழல் உருவாகும்போது எப்படியாவது வாழ்வில் முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறி முஸ்தபாவுக்கு ஏற்பட்டது. அதே சமயம் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. இதை அறிந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் முஸ்தபா மீண்டும் பள்ளியில் சேரவும் படிப்பை முடிக்கவும் உதவினார்

படிப்பு கைவிட்டுப் போன பின்பு மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தால் வெறித்தனமாக படிப்பார்கள் என பலரையும் பார்த்திருப்போம். அதுபோல்தான் இவரும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கோழிக்கோட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

இன்ஜினியரிங் முடித்து மோட்டோரோலா நிறுவனத்தில் 15,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், மன்ஹாட்டன் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திலும் பணியாற்றினார். இதையடுத்து கிடைத்த துபாயில் உள்ள சிட்டி பேங்கில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

நினைவு இருக்கட்டும். ரூ.10 சம்பளத்திலிருந்து கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவரை ரூ.1 லட்சம் சம்பளத்துக்கு உயர்த்தி உள்ளது.

இன்டீரியர் டிசைனர் ஆன சர்ஜா என்பவரை திருமணம் செய்த அவருக்கு 3 மகன்கள் பிறந்தனர்.

வெளிநாட்டில் பணிபுரிந்த போது சேமித்து வைத்த ரூ.15 லட்சம் உடன் இந்தியா திரும்பிய அவர் வர்த்தக நிர்வாக படிப்பை முடித்தார்.

இந்தியாவில் தென்னிந்திய உணவு வகைகள் இட்லி தோசை போன்றவை நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை என்று உணர்ந்தார்.

எனவே இட்லி தோசைக்கான மாவை இந்தியா முழுக்க விற்பனை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற யோசனை அவருக்கு வந்தது.

வடநாட்டினர் பலரும் அரிசியல் ஆர்வம் காட்டாததாலும், அதனை அரைக்கும் பக்குவம் அவர்களுக்கு தெரியாதுதாலும் தென்னிந்திய உணவுகள் பிடித்திருந்தாலும் அவர்கள் அதனை வீட்டில் சாப்பிடாது ஹோட்டல் உள்ளிட்டவற்றில் மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்தனர்.

இதுவே அவரது தொழிலுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

2005 இல் பெங்களூருவில் ரூ.50,000 முதலீட்டில் வெறும் 50 சதுர அடி கடையில் இட்லி தோசை என ID பிரஷ் ஃபுட்ஸ் மாவு விற்பனை நிறுவனத்தை தொடங்கினார்.

அருகில் உள்ள மளிகை கடைகளுக்கும் விற்பனை செய்ய ஒரு நாளைக்கு 100 பாக்கெட்டுகள் விற்பனை என்ற இலக்கை நிர்ணயித்தார்.

ஆனால் தினமும் 100 பாக்கெட் என்பது அவரால் எட்ட முடியாத இலக்காக 9 மாதங்கள் இருந்தது.
இருந்தபோதும் நம்பிக்கையை கைவிடாது அவர் மெல்ல மெல்ல லாபம் வருவதை எண்ணி காத்திருந்தார்

கிடைத்த சிறிது லாபத்தை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்து 550 சதுர அடியில் மாவு உற்பத்தி நிறுவனம் தொடங்கினார். இப்போது 100 பாக்கெட் இட்லி மாவு என்பது அவருக்கு எளிதில் விற்று போனது.

தினமும் 300 பங்குதாரர் கடைகளுக்கு 200 கிலோ மாவு தயாரிக்கும் அளவு முன்னேறினார்.

அவரது மாத வருமானம் ரூ.1 கோடி ஆனது.

நினைவிருக்கட்டும் படிப்பை கைவிட்ட முஸ்தபாவுக்கு கிடைத்த முதல் சம்பளம் ரூ. 10. வெளிநாட்டில் கிடைத்த சம்பளம் ரூ.11 லட்சம். அது போதும் என்று அவர் நினைக்காததால் தொடர்ந்து முன்னேறி உழைக்க வேண்டும் என்று நினைப்பு அவருக்கு உத்வேகத்தை கொடுத்தது. இதன் மூலம் அவர் ரூ.1 கோடியை எட்டியுள்ளார்.

மும்பை உள்பட 10 புதிய நகரங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்தி 2014இல் துபாயிலும் கிளை திறந்தார்.

இதை எடுத்து வெறும் இட்லி தோசை உடன் நிறுத்திக் கொள்ளாமல், சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்டவற்றையும் சேர்த்தார்.

தினமும் 50000 கிலோ மாவு 40000 சப்பாத்தி 20000 பராத்தாக்களை விற்று மாதம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வந்தார். ரூ.10 ரூ.100 கோடி ஆனது.

இதனால் அசுர வளர்ச்சியை கண்டு விப்ரோ நிறுவனத்தின் அசின் பிரேம்ஜி இந்த நிறுவனத்துக்கு 170 கோடி ரூபாயில் முதலீடு செய்தார்.

தற்போது ராகி மாவு, தயிர், பனீர் உள்ளிட்டவற்றையும் விற்று வருகிறார். 80,000 சதுர அடியில் பெரிய தொழிற்சாலையும் உருவாக்கி விட்டார்.

ID ஃபிரஸ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.500 கோடி என்ற மைல்களை தாண்டி விட்டது.

தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 2000 கோடியாக உள்ளது.

நினைவிருக்கட்டும் இந்த சிறுவன் தான் பத்து ரூபாய் சம்பாதித்த சிறுவன். அது போதும் என திருப்தி அடையாமல், கடின உழைப்பும் விடாமுயற்சியும் இவரை எவ்வளவு முன்னேற்றி இருக்கிறது என்பதை பாருங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE