மனைவிக்கு 60 கிலோ தங்கம் போட்ட மகராசன் இவருதான்!

வாழ்க்கையின் பிற்பகுதியை தனக்காக அர்ப்பணிப்பவர் மனைவி. அப்படி, தனக்கு வர போகும் மனைவிக்கு ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்றார் போல பரிசுகளை வழங்குவதுண்டு.

  • செல்போன் பரிசு

பொதுவாக செல்ஃபோன்களே பரிசாக வழங்கப்படும். தங்களுடன் எப்போதும் தங்களது ஆசை மனைவி, தங்கு தடை இன்றி உரையாட செல்போனை பரிசளித்தனர். பின் அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன் புழங்கியதை அடுத்து விலையுயர்ந்த செல்போன்களை பரிசளித்தனர்.

  • வழக்கமான தங்க பரிசுகள் என்ன?

நிச்சயதார்த்த மோதிரம் தங்கத்தில் பரிசளிக்கப்பட்டது. அதேபோல் திருமணத்திற்கு மாங்கல்யமும் தாலிக்கொடியும் கணவர் வீட்டார் போடுவது வழக்கமானது. இதுபோல அதிக சக்தி படைத்தவர்கள் தங்கள் வாழ்வில் துணையாக வரப்போகும் மனைவிக்கு நெக்லஸ், வைர நெக்லஸ், ஆரம், ஒட்டியானம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்குவதுண்டு.

  • 60 கிலோ நகையா?

சீனாவில் ஒரு தொழிலதிபர் தனக்கு வரப்போகும் மனைவிக்கு 60 கிலோவில் தங்க நகைகளை பரிசளித்துள்ளார்.

  • பெரும் செல்வந்தர்கள்

மணமகள் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் பெரிய செல்வந்தர்கள் எனக் கூறப்படுகிறது. மணமகன் தனக்கு வர போகும் மனைவிக்காக சம்பாதிக்க தொடங்கியது முதலே நகைகளை வாங்கி குவித்து வந்திருக்கிறார். இதனை பல்வேறு கால கட்டங்களில் அவருக்கு பரிசாகவும் அளித்துள்ளார்.

  • தலைவலி கொடுத்த தங்க நகைகள்

கணவர் பரிசளித்த அத்தனை நகைகளையும் தனது திருமணத்தன்று போட்டு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அதுவே பெரிய தலைவலி ஆகிப்போனது தான் வேதனை.

  • மணப்பெண்ணின் எடையை விட நகையின் எடை அதிகமாம்

சுமார், 40 முதல் 50 கிலோ எடை உள்ள ஒரு பெண் 60 கிலோ நகைகளை சுமந்து வந்தது அங்கிருந்தவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

  • என்னென்ன நகைகள்?

60 நெக்லஸ்கள், தங்கத்தில் உருவாக்கப்பட்ட மேலாடை, ஏராளமான வளையல்களை அவர் வழங்கியுள்ளார். கழுத்தில் அணிய செயின்களுக்கு இடமில்லாததால், அவற்றை இடுப்பைச் சுற்றிலும் தொங்க விட்டார்.

  • நடக்க முடியாமல் திணறிய மணப்பெண்

மணமகள் எடையை விட தங்க ஆபரணங்களின் எடை கூடிப்போனதால், அவர் நடக்கவே சிரமப்பட்டார்.

  • உதவிக்கு வந்தவருக்கு நோஸ்கட்

கூட்டத்தில் இருந்தவர்கள் ஏதேனும் உதவி செய்யலாமா? சற்று நகைகளை என்னிடம் கொடுக்கிறீர்களா ? என கேட்டுள்ளனர். ஆனால், அந்தப் பெண் தனக்கு இதுவே போதும், தான் நார்மலாக தான் இருப்பதாக கூறி மறுத்துவிட்டார்.

  • தங்க நகையால் திண்டாடிய மணப்பெண்

கணவனின் தங்க நகை பரிசு அனைத்தையும் ஒரே நாளில் பூட்டிக்கொண்டு, ஆச்சரியம் கொடுக்க வேண்டும் என நினைத்தார் மணப்பெண். ஆனால், “ஏன் அப்பா இந்த ஒரு முடிவை எடுத்தோம்” என வருந்தி திணறிப் போய்விட்டார்.

Facebook
Instagram
YOUTUBE