திரை உலகில் எத்தனை காலம் கடந்தாலும் Gossip எனும் புரளி பேசுவது தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளை பற்றி அவர்களது ரசிகர்கள் தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் தான்.

இந்த ஆர்வத்தை பயன்படுத்தி தான் 80-களில் ஹீரோயின்களாக இருந்த பல நடிகைகள் YouTube சேனல் மூலம் தங்களது காலத்தில் நடந்த கிசுகிசுக்ககளையும் தெரிந்த தெரியாத பல விஷயங்களையும் தங்களது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஏற்கனவே நடிகை சீதா, குட்டி பத்மினி உள்ளிட்டோர் யூடியூப் சேனல் தொடங்கி தங்களது வீட்டைப் பற்றியும் பிறரது வாழ்க்கையை பற்றியும் தங்களது திரையுலக வாழ்க்கை நினைவுகளை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படித்தான் குட்டி பத்மினி சமீபத்தில் ஸ்ரீதேவி பற்றி சில தகவல்களை பகிர்ந்திருந்தார். இளம் வயதில் இருந்த போது ஸ்ரீதேவியை உறங்க வைக்க அவரது தாயார் ஒயின் என்ற மதுபானத்தை அவருக்கு கொடுத்து தான் உறங்க வைத்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் 6 நடிகைகளை காதலித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை ரேகா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி மற்றும் இருவர் என இந்த பட்டியலில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாணி கணபதிக்கு நடிகர் கமலஹாசன் ஏர்போர்ட்டில் பரிசு கொண்டு வந்து கொடுத்தது பற்றி தான் ஸ்ரீதேவியிடம் கூறிய போது, அவர் அதை நம்பவில்லை என்றும். அதனால் தான் சகலகலா வல்லவன் என அவருக்கு பெயர் வந்தது என்றும் ஸ்ரீதேவி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைக்கு திரை உலகில் மிகவும் சார்மிங்கான நடிகராகவும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு இளைஞனாகவும் நடிகர் கமலஹாசன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த 6 பேரில் நடிகர் கமலஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டதாகவும் இதனை நடிகை ஸ்ரீவித்யாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீவித்யா இதை அடுத்து மிகவும் டிப்ரஷன் என்ற மன அழுத்த நிலைக்கு சென்று விட்டதாகவும் அதிலிருந்து மீளவே வெகு காலம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

13 வயதிலேயே நடிக்க வந்த ஸ்ரீவித்யா நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இதை அடுத்து ஸ்ரீவித்யா 1978 ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டே ஆண்டுகளில் ஸ்ரீவித்யா சம்பாதித்திருந்த சொத்து பணம் பரிசுகள் உள்ளிட்ட அனைத்தையுமே தனது கணவர் பறித்துக் கொண்டதாகவும் அவரிடமிருந்து தான் விலகி விட்டதால் விவாகரத்து பெற்று தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உசுநீதிமன்றத்தில் ஸ்ரீவித்யாவுக்கு ஆதரவாக அந்த வழக்கு தீர்ப்பானது இதை அடுத்து தான் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் பெற்றார். இருந்த போதும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார் ஸ்ரீவித்யா. இருப்பினும் உடல் ஒத்துழைக்காமல் 2006ல் உயிரிழந்தார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE