31 ஆண்டு சிறை, 154 கசையடி, இருந்தும் நோபல் பரிசு
2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கு உரிய நோபல் பரிசு நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 2ம் தேதி முதல் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த நர்கீஸ் முகமதி?
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளை கண்டித்து வருபவர் நர்கீஸ் முகமதி. இவர் மனித உரிமைகள் மற்றும் பெண் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். அதற்காக போராடி தற்போது ஈரானில் சிறையிலும் உள்ளார். சமூக செயற்பாட்டாளரான இவர் 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்குரிய நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஸ் அகாடமி அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரைனின் மனித உரிமைகள் அமைப்பான சென்டர் பர் சிபில் லிபர்ட்டிஸ் ஆகியவற்றுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன அக்டோபர் 6ம் தேதியான இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதுதான் நர்கீஸ் முகமது கிடைக்கிறது.
எதற்காக நர்கீஸ்-க்கு நோபல்?
ஈரானின் ஜான் ஜான் பகுதியைச் சேர்ந்தவர் நர்கீஸ் முகமது. ஏற்கனவே மனித உரிமைகளுக்காக போராடியதற்காக ஈரானிய அரசால் 13 முறை கைது செய்யப்பட்டவர். 5 முறை குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார்.
31 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நர்கீஸ் முகமதிக்கு இதுவரை 154 கசையடிகள் கொடுக்கப்பட்டன.
தற்போது கூட நர்கீஸ் முகமதி சிறைவாசத்தில் தான் உள்ளார். அமைதிக்காக கசையடிகளையும் சிறை தண்டனைகளையும் குற்றவாளி என்ற பட்டத்தையும் பெற்று பெண் உரிமைக்காகவும் அனைவருக்கான சுதந்திரத்திற்காகவும் போராடுவதால் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.