30 வயது எட்டியவர்கள் தங்கள் வாழ்நாளில், அடுத்த ஒரு சில பத்தாண்டுகளில் என்னென்ன வியாதியை உடலில் சேர்த்துக் கொள்கிறார்கள் தெரியுமா? அதற்கெல்லாம் 30 வயது முதல் அவர்கள் சாப்பிடும் உணவுப் பழக்க வழக்கமே காரணமாக அமைகிறது. எனவே முப்பது வயதை கடந்தவர்கள் குறிப்பாக என்னென்ன உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னென்ன உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் ?என்பது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

சாப்பிட வேண்டியவை

  • நார்ச்சத்து உணவு

உடல் செரிமானத்துக்கு நார்ச்சத்து ஆனது மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே பீன்ஸ், பிரக்கோலி, பெர்ரி, முழு தானியங்கள், ஆப்பிள் உள்ளிட்ட நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய் பக்கவாதம் உள்ளிட்ட அபாயங்கள் வருவதைக் குறைக்கலாம்.

  • ஒமேகா 3 கொழுப்பு

30 வயதை கடந்தவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வயது மூப்பு அதிக அறிகுறிகளை தள்ளிப் போட உதவும். குறிப்பாக சாலமன் மீன்கள், வெண்ணெய் பழம் அதாவது பட்டர் ஃப்ரூட், பெர்ரிஸ், தயிர் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொண்டால் முகச்சுருக்கம், இளநரை உள்ளிட்டவை குறைய வாய்ப்புண்டு.

  • கால்சியம் நிறைந்த உணவு

30 வயதிற்குப் பின் முதுகெலும்பு தேய்மானம், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரக்கூடும். அதற்கு ஏற்ப உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க வேண்டும். சிறுவயதில் இருந்து பால் உள்ளிட்ட பொருட்களை பருகாதவர்களாக இருப்பின் 30 வயதுக்கு மேல் தினசரி இரவு உறங்கும் முன் ஒரு கப் பாலை பருகி விட்டு படுப்பது நலம். இதனால் விரைவில் எலும்பு, தேய்மானம் மூட்டு வலி உள்ளிட்டவை வருவது குறையும்.

சாப்பிடக்கூடாதவை

  • கொழுப்பு உணவுகள்

30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவில் அதிக அளவு கொழுப்பு கொண்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க உணவு பண்டங்கள் உடலுக்கு பருமனை ஏற்படுத்தும். இதன் பின் விளைவாக மாரடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  • மது

30 வயதை கடந்தவர்கள் ஆல்கஹால் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதிக அளவு ஆல்கஹால் பருகும் போது ஒரு சில ஆண்டுகளில் நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே, அதனை தடுக்க ஆல்கஹால் பருகும் அளவை குறைக்க வேண்டும்.

  • பதப்படுத்திய உணவுகள்

பாக்கெட்டில் அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை 30 வயதுக்கு பின் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பாக்கெட் பால் பயன்படுத்துவதற்கு பதில் வீட்டுக்கே கொண்டு வந்து தரும் பால் காரர்களிடம் வாங்கலாம். உணவுப் பொருட்களில் கெட்ட கொலஸ்ட்ரால் தேக்கத்துக்கு பாக்கெட் உணவு பொருட்கள் வழிவகுக்கும் இதன் விளைவாக மாரடைப்பு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  • காலை உணவு தவிர்க்கக்கூடாது

ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் புரதம் காலை உணவிலிருந்துதான் கிடைக்கும். எனவே இளம் பருவத்தினர் காலை உணவை முடிந்த அளவு தவிர்க்காமல் இருப்பது நல்லது.

  • மாமிசம்

30 வயதுக்குப் பின் அதிக மாமிசம் உட்கொள்ளக்கூடாது. இது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே மாமிசத்தை தவிர்த்து முடிந்த அளவு பச்சை இலை காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள “த காரிகை“யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE