பெரும்பாலான பெண்கள் எப்போதுமே சுயநலமாக இருக்க மாட்டார்கள். தனது நலம் தனது உடல்நலம் என கருதி அக்கறையோடு தனது உடலை பராமரிக்காமல், தனது குழந்தைகள் தனது குடும்ப நலம், அவர்களுக்கான சாப்பாடு, தேவைகள் என ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களை மறந்தே போவார்கள்.

இன்று மதியம் சாப்பிட்டோமா, சாப்பிடவில்லையா என்பது கூட அவர்களுக்கு நினைவில் இல்லாத அளவு ஓடி ஓடி குடும்பத்துக்கு என வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் இன்னமும் கடினம். அவர்களுக்கு இரட்டைச் சுமை.

அப்படி குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கும் பெண்கள் தங்களது 30 வயது முதல் 40 வயதிற்குள் இந்த 8 பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொண்டால் தான் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்தோடு ஆயுளோடும் குடும்பத்தை பராமரிக்க முடியும்.

அப்படி அவர்கள் செய்து கொள்ள வேண்டிய 8 பரிசோதனைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

  1. கருப்பை வாய் புற்றுநோய்

பாலுறவில் ஆக்டிவாக இருக்கும் பெண்கள் கட்டாயம் கருப்பை வாய் புற்றுநோய் சோதனையை செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்தியாவில் உருவாகும் பெண்களிடையேயான புற்றுநோய் இறப்புகளில் 69 லட்சம் புற்றுநோய் இறப்புகள் தவிர்க்க கூடியவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் புற்றுநோயானது உடலில் இருந்தால் முற்றும் நிலை வரை அறிகுறிகளை வெளிப்படுத்தாது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் பாதிக்கப்படும் பெண்கள், பாலுறவு நிறுத்தப்பட்டு சில ஆண்டுகளுக்கு பின்பு கூட அசாதாரண புற்றுநோய் வளர்ச்சியால் கருப்பை வாய் புற்றுநோயை எதிர்கொள்ள கூடும்.

  1. மார்பக புற்றுநோய்

பெண்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது மாதவிடாய் சுழற்சி முடிந்த பின்பு 3-வது நாளில் தொடங்கி தங்களது மார்பகங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மார்பகங்களின் அளவு ஒன்றுடன் ஒன்று வேறுபடுதல், கைகளை வைத்து வட்ட வடிவில் அழுத்திப் பார்க்கும்போது கைகளில் தென்படும் அசாதாரண கட்டி, அக்குளில் ஏற்படும் கட்டி, காம்புகளில் ரத்தம் அல்லது வெள்ளை நிறத்தில் ஏதேனும் திரவம் கசிதல், மார்பகத் தோல் ஆரஞ்சு பழ தோல் போன்று புள்ளி புள்ளியாக மாறுதல் உள்ளிட்ட வை மார்பக புற்று நோய்களின் அறிகுறியாகும். இதனை தடுக்க ஆரம்ப நிலையிலேயே மெமோகிராம் என்ற சோதனையை செய்தால் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்ளலாம்.

மேற்கூறிய புற்றுநோய் சோதனைகளை பெண்களின் குடும்பத்தில் அம்மா, அப்பா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி என நெருங்கிய ரத்த உறவில் யாருக்கேனும் புற்றுநோய் வந்திருந்தால் கட்டாயம் செய்துகொள்ள வேண்டியது நல்லது.

  1. சர்க்கரை நோய்

குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என யாருக்கேனும் சர்க்கரை வியாதி இருந்தால் அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டிய ரத்த குளுக்கோஸ் அளவை பரிசோதித்து கொள்வது நல்லது. ஏனெனில் உடலில் சர்க்கரை நோய் தான் அனைத்து நோய்களையும் உடலுக்குள் வர கதவைத் திறந்து விடும் வாயிற் கதவாகும்.

  1. தைராய்டு பரிசோதனை

உடலில் டிஎப் டி என்ற தைராய்டு பரிசோதனை அவ்வப்போது மேற்கொண்டு வந்தாலே அதனால் விளையும் பின்விளைவுகளையும் நோய்களையும் தடுக்கலாம். 30 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏதேனும் ஒருமுறை தைராய்டு வர கூடும் என்று வாய்ப்புள்ளதால் அவர்கள் கவனமாக இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

  1. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் டெஸ்ட்

உடலில் ரத்தம் சீராக ஓடிக் கொண்டிருந்தால் தான் அனைத்து உறுப்புகளும், ரத்தத்தின் மூலம் சத்துக்களை பெற்று சீராக செயல்பட முடியும். அந்த ரத்தம் ஆனது கூடினாலோ குறைந்தாலும் பிரச்சனை தான். இதயம், மூளை உள்ளிட்டவற்றுக்கு ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதேபோல் கொலஸ்ட்ரால் அதிகரித்தாலும் பக்கவாதம், இருதய நோய், ஹார்ட் அட்டாக் உள்ளிட்டவை வரக்கூடும்.

  1. எலும்பு அடர்த்தி பரிசோதனை

பாலூட்டும் தாய்மார்கள் அவர்கள் உடலில் இருந்து சரி பங்கு கால்சியத்தை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார்கள். ஆனால் அதன்பின் அவர்கள் தேவையான அளவு கால்சியத்தை உடலில் எடுத்துக் கொள்ளாமல் போகும்போது எலும்பு அடர்த்தி நோய் வரக்கூடும். ஆஸ்ட்ரியோபோரோசிஸ் நோய் வராமல் தவிர்க்க வேண்டும்.

  1. கண் பரிசோதனை

30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண் என்பதால் பிரசவத்திற்கு பின்பு அவர்களது கண்களில் சில பார்வை குறைபாடுகள் ஏற்படக்கூடும். எனவே கண்புரை குளுக்கோமா உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

  1. தோல் புற்றுநோய் பரிசோதனை

பெருங்குடல் மற்றும் தோல் புற்றுநோய்க்கான அறிகுறிகளையும் கண்காணித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE