குழந்தையை தரையில் அடித்துக் கொடூர கொலை. தடுக்க முடியாமல் பலாத்காரத்தில் சிக்கிய தாய்
3 வயது பெண் குழந்தையை தாயின் கண் முன்னே தூக்கி தரையில் அடித்து கொடூரமாக கொலை செய்த சமயம் அது. ஆனால் அவரால் தடுக்க முடியவில்லை.
அவர் பல ஆண்களால் கொடூரமாக மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்டு கொண்டிருந்த நேரம் அது.
குடும்பத்தினர் உறவினர் உள்ளிட்ட 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் செய்த தவறாக கொடூர வெறியாட்டம் ஆடிய கும்பல் நினைத்தது அவர்களின் பிறந்த ஜாதி.
இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக தற்போது பிரதமராக உள்ள மோடி குஜராத்தில் முதல்வராக ஆட்சி செய்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என இஸ்லாமியர்கள் மீது சில இந்துக்கள் வெறியாட்டம் ஆடி தீர்த்தனர். அந்த வழக்கில் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்ட 11 பேரும் தற்போது மீண்டும் சிறை செல்ல வேண்டிய சூழலை உச்ச நீதிமன்றம் கச்சிதமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
குஜராத் அரசுக்கு பளார்! பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ஒரு குரூர சம்பவம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா வகுப்பு வாதத்தினர் கலவரம். அப்போது ரயில் உள்ளிட்டவை எரிக்கப்பட்டன. இஸ்லாமியர்களின் வீடு புகுந்து பலரும் சூறையாடினர். 21 வயதாக இருந்த பில்கிஸ் பானு என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினர் என 7 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் 11 பேர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த தண்டனையை முன்கூட்டியே ரத்து செய்தது குஜராத் அரசு.
மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி குஜராத் அரசு எடுத்த இந்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆளும் பாஜக அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும் குஜராத் அரசு அந்த உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு தீவிரமாக விசாரித்தது.
குஜராத் அரசின் இந்த முடிவு பொருத்தமானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் அரசின் இந்த நடவடிக்கை ஃப்ராடுலன்ட் ஆக்ட் அதாவது ஒரு மோசடி போன்ற ஒரு செயல் என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
எனவே 2 வாரங்களில் 11 குற்றவாளிகளும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற ஒரு குற்றத்தை இழைத்து விட்டு அவர்கள் மிகவும் சுதந்திரமாக இந்த சமூகத்தில் நடமாட குஜராத் அரசு அனுமதித்தது மிகப்பெரிய தவறு என்றும் மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும் பிருந்தா காரத் காட்டமாக விமர்சித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குஜராத் அரசுக்கு கன்னத்தில் விழுந்த பலத்ததோர் பளார் அடி என்றும் சரியான அடியை தான் உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றவாளிகள் சுதந்திரமாக உலவத் தொடங்கிய நாள் முதல் பல்வேறு வீடுகளை மாற்றியிருந்தார் பில்கிஸ் பானு. தற்போது தான் அவர் நிம்மதி அடைந்திருப்பார் என்றும் பெண் சமூக ஆர்வலர்கள் ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்