நடிகர் அனுமோகன் பல படங்களை இயக்கியிருந்தாலும், படையப்பா படத்தில் பாம்புப் புத்துக்குள்ள கைய விட்ட டயலாக் ஆல் ஃபேமஸ் ஆனவர். அவர் சமீப காலமாக சித்தர்களின் ஆய்வில் ஆரூடமும் கூறி வருகிறார். இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மைக்காலமாக சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்.

சித்தர் வழிபாட்டால்தான் திரைத்துரையில் இருந்து ஒதுங்கியிருந்த தனக்கு பட வாய்ப்புக்கள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனக்கு பல ஆண்டுகளாக பட வாய்ப்பே இல்லாமல் இருந்தது. என் மனைவி சென்னை பனகல் பார்க்கில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு வந்தார். 9 வாரங்களுக்கு பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியதால்தான் படையப்பா படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது” அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே உலகக் கோப்பையில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பைப் பற்றியும் அவர் ஆரூடம் கூறி வந்தார். அது ஒரு முறை பொய்த்ததால் நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வந்தனர். இம்முறை “31.12.2024-ம் தேதிக்குள் மீண்டும் ஒரு சுனாமி வரும், அது இலங்கைத் தீவையே முழுதாக நீரால் ஆட்கொண்டு விடும் எனக் கூறி திகிலைக் கிளப்பியுள்ளார். அதேபோன்று, அந்த சுனாமியால் சென்னையில் தேனாம்பேட்டை வரை கடல் நீர் வந்துவிடும் என்றும் அனுமோகன் தனது ஆரூடத்தில் கணித்துள்ளார்.

படையப்பா படத்தில் கொங்கு தமிழில் அனுமோகன் ரஜினியைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த டயலாக்கைக் கேட்டுக் கொண்டே இருப்பார். அதாவது, “ ஏனுங், அந்த பாம்புப் புத்துக்குள்ள கைய விட்டீங்களே? கடிக்கலைங்களா?” என கேட்பார். அதற்கு பல முறை பதில் சொல்லாமல் ரஜினிகாந்த் தவிர்த்து வருவார். இறுதியாக, “கடிச்சுது, ஆனா, இந்த உடம்புக்கு எந்தப் பாம்போட விஷாமாக இருந்தாலும் ஏறாது” எனக் கூறியதற்கு தியேட்டர் முழுக்க கரவொலிகள் அதிர்ந்தன..

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE