பொதுவா புது வருஷம் பிறக்கும் போது, இனிமேல் உடல் எடையக் குறைக்கப் போறேன். இந்த வருஷம் ஆரோக்யமா மட்டும்தான் சாப்டுவேன். 2024-ல இருந்து சரக்கையே கைவிடப் போறேன், இனிமே குடிக்க மாட்டேன்னு நிறைய பேரு சொல்லுறத பாத்திருப்போம். ஆனா, இது எல்லாமே காலைல அடிக்குற அலாரத்த ஸ்னூஸ் மோட்ல போட்ற மாதிரி தான். எப்டியும் அடுத்த வருஷத்துக்கு அந்த ரெசல்யூசனும் தள்ளிப் போயிடும். அப்டி தள்ளிப் போடாம சிம்பிளா முடிக்கக் கூடிய சில ரெசல்யூசன்கள உங்களுக்கு த காரிகை வழங்குகிறது.

ஏன்னா, சின்னச் சின்ன மாற்றம் தான் உங்கள முழுசா வடிவமைக்கும். அப்டிப்பட்ட சின்னச் சின்ன மாற்றம் தரும் ரெசல்யூசன்ஸ் இதோ. .

  1. தினமும் யார்கிட்டயாச்சும் கருணையோட நடந்துக்கோங்க. முக்கிமா அது உங்களோட வாழ்க்கையில கடைசி வரைக்கும் பயணிக்கக் கூடிய ஒரு நபரா இருந்தா நல்லது. சாப்டீங்களான்னு உங்க அம்மா, அப்பா இல்ல சகோதரி, சகோதரன், மனைவி, காதலன், காதலின்னு யார்டயாச்சும் தினமும் ஒரு தடவை அக்கறையா கேட்டுப் பாருங்க. அந்த மாற்றம் உங்களுக்குள்ள இருக்குற அன்ப விதைச்சு அது உங்களுக்கே நிழல் தரக் கூடிய ஆலமரமா பரந்து விரியும்.
  2. நீங்கள் என்ன பணியாற்றிக் கொண்டு இருந்தாலும், உங்களது பேஷன் வேறொன்றாக இருந்தால், அதைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்வதற்காகவும், அதற்காக ஆக்கப் பூர்வமாக நேரத்தைச் செலவிடவும் கற்றுக் கொள்ளுங்கள்.
  3. உடல் எடை ஒல்லியாகிவிடாமல் ஒர்க் அவுட் செய்து ஆரோக்யமாக இருங்கள்.
  4. பிறரைப் பற்றி புறம் பேசக் கூடாது.
  5. தினமும் யாரேனும் ஒருவரின் செயலைப் பாராட்டிப் பாருங்கள்.
  6. இல்லாதவர் கண்முன் கஷ்டப்படும் போது கேட்காமலே உதவுங்கள்.
  7. ஒரு மாதத்துக்கு ஒரு புத்தகமாவது படியுங்கள். தினமும் ஒரு பக்கம் படிப்பதும் ஆரோக்யமானது தான்.
  8. இதுவரை போகாத ஒரு இடத்துக்கு சென்று வாருங்கள்
  9. குட்டிக் குட்டி பட்ஜெட்டில் உள்ள இடங்களை எல்லாம் சுற்றிப் பாருங்கள்.
  10. மேப்புக்கான வழித்தடம் போடாமல் எங்கேனும் லாங் டிரைவ் செல்லுங்கள்.
  11. திரும்ப வீடு திரும்பும் போது மட்டும் கூகுள் மேப் போட்டு வீடு திரும்பிப் பாருங்கள்
  12. ஏதேனும் ஒரு புதிய ரெஸ்டாரன்டில், புதிய வகை உணவை முயற்சித்துப் பாருங்கள்.
  13. உங்கள் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றில் தேவையற்று இருக்கும் குப்பைகளை அகற்றுங்கள்.
  14. நெகட்டிவிட்டி தரும் விஷயங்களை வாழ்வில் இருந்து ஒதுக்குங்கள்.
  15. உணவோ, பணமோ வீணடிக்க வேண்டாம்.
  16. இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE