2024 நியூ இயர் ரெசல்யூசன்ஸ் ஐடியாஸின் முதல் பாகத்தை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும். தொடர்ச்சியான 2-ம் பாகம் இதோ. .

  1. வெள்ளமோ, புயலோ மக்களுக்கு நல்லதொரு சேவை நடக்கும் இடத்தில் உங்களைத் தன்னார்வலராக இணைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு நிம்மதியைத் தரும்.
  2. தினமும் நீங்கள் செய்த ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை போனிலோ, டைரியிலோ எழுதுங்கள். இது உங்களை மேலும் நல்லவராக்கும்.
  3. அதிக தண்ணீர் குடிப்பதை சபதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. சம்பளம் வந்தவுடன் முதலில் சேமிப்புக்கு எடுத்து வைத்தது போக மீதத்தை செலவு செய்யுங்கள்.
  5. நீங்கள் வறுமையிலோ, அல்லது சிங்கிள் அம்மாவாகவோ இல்லாவிட்டால், மல்டி டாஸ்கிங் செய்து உங்களது மூளைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிருங்கள்.
  6. உங்கள் தோழிக்கு, நண்பருக்கு டெக்ஸ்ட் செய்து நலம் விசாரிப்பதற்கு பதில், போன் செய்து பேசுங்கள்.
  7. உங்களது பில்களை ஆட்டோ பே மோடில் போடுங்கள். மறந்துவிட்டு அதிக வட்டி கட்ட வேண்டாம்.
  8. தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். தேவையானதை விற்க நேரிடும்.
  9. லிஃப்டில் செல்வதற்கு பதில் படிக்கட்டைப் பயன்படுத்துங்கள்.
  10. சமூக வலைதளம்தானே முகம் தெரியாது, என நினைத்து யாரை வேண்டுமானாலும், இஷ்டத்துக்கு பேசுவதை நிறுத்தி, சமூக வலைதள ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள்.
  11. வன்மத்தைக் கைவிடுவதை புத்தாண்டு சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
  12. வீட்டில் ஒரு செடியோ, மரமோ நட்டு அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி, களையெடுத்து பராமரியுங்கள்.
  13. சமையல் கற்றுக் கொள்ளுங்கள். அது உயிர்வாழ்வதற்கான திறமைகளில் முக்கியமான ஒன்று.
  14. பயன்படுத்தாத பொருட்களையும், துணிகளையும் மனமுவந்து பிறருக்கு தானம் கொடுங்கள்.
  15. மாதா மாதம் கிரெடிட் கார்டுகளுக்கான பில்களை செலுத்துங்கள்.

இதில் உங்களுடைய கோல், ரெசல்யூசன் எதுவாக இருந்தாலும், அதை எழுதி வையுங்கள். ஆய்வின்படி எழுதி வைத்து பின்பற்றுபவர்கள் 42 சதவீதம் பேர் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் மேம்படுத்துங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE