2024-ல் என்னென்ன ஆபத்து – பாபா வாங்கா கணிப்பு

உலகில் உள்ள பல தீர்க்கத்தரிசிகளில் முக்கியமானவர் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா. 1911 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வை தெரியாது. ஆனால், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என அவர் கணித்தது 85 சதவீதம் அப்படியே நடந்திருக்கிறது. இதனால்தான் உலக அளவில் பாபா வாங்காவின் கணிப்பு என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என நம்ப அவருக்கென தனி ரசிகர்களே உள்ளனர்.

இவர் பிரபலமானது 2-ம் உலகப் போர் கணிப்பின் மூலம்தான். 85 வயதில் அவர் உயிரிழந்தாலும், 5079-ம் ஆண்டு வரை அவர் மனக்கண்ணில் கண்ட எதிர்காலக் குறிப்புக்களையும், ஆபத்துக்களையும் குறிப்பாக எழுதியுள்ளார். 2023 ஆம் ஆண்டில் கூட இவர் இந்தியாவைப் பற்றி கணித்த 6 கணிப்புகளில் 3 நிகழ்ந்துவிட்டன.

இன்னும் 10 நாட்களில் 2024 பிறக்கவுள்ள நிலையில், வரும் ஆண்டில் இந்த பூமிக்கும் அதில் வாழும் மக்களுக்கும் என்னென்ன நடக்கப் போகிறது என அவர் கணித்துள்ளார்.

அதில் முக்கியமானது ரஷ்ய அதிபர் புதினின் மரணம். அதாவது, 2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புதினை அந்நாட்டு மக்களே சதி செய்து படுகொலை செய்யலாம் என்று கணித்துள்ளார். இது உக்ரைன் மீதும் ஒரு நல்ல வித முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

புற்றுநோய்க்கு மருந்து

உலகில் நாள்தோறும் புற்றுநோயால் பலரும் பாதித்து, உயிரிழந்து வருகின்றனர். எவ்வளவோ முன்னேறினாலும், மருத்துவ உலகில் இது ஒரு சவாலான மருந்தாகவே உள்ள நிலையில், வரும் 2024-ம் ஆண்டில் கொடிய புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் எனக் கூறியுள்ளார். மருத்துவத் துறையில் இது ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக அமையலாம் எனக் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

பாபா வாங்காவின் 3-வது கணிப்பு, நிதி நெருக்கடி. அதாவது, 2024 ஆம் ஆண்டில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து, அது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கணித்துள்ளார்.

உயிரியல் ஆயுதம்

பாபா வாங்கா கணித்துள்ள மற்றொரு பயங்கரமான கணிப்பு, இந்த ஆண்டில் ஒரு உயிரியல் ஆயுதங்களை உலகின் மிகப்பெரிய நாடு சோதனை செய்யக்கூடும் என்பதுதான்.

சைபர் தாக்குதல்

உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பல முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்து ஹேக் செய்ய வாய்ப்புள்ளது.

பேரழிவு

பாபா வாங்காவின் மற்றொரு முக்கிய கணிப்பு புவி வெப்பமடைதலால், காலநிலை தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்று கணித்துள்ளார். அதாவது, பூகம்பம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE