சூர்யா ஜோதிகா நடித்த காக்க காக்க திரைப்படம் வெளியாகி ஆகஸ்ட் 1, 2023 உடன் 20 ஆண்டுகள் ஆகிறது.

நடிகர் சூர்யா இதைப் பற்றி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அனைத்தையும் தனக்கு கொடுத்த படம் இது என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜோதிகா. இதனை சொல்லியே ஆக வேண்டும். ஜோதிகாவின் மீது காதல் வயப்பட்டு திருமணம் வரை சென்ற தற்போது மனைவியாக மாறி நல்ல இணையராக சமூகத்தில் பெயர் எடுத்து வருகின்றனர் என்றால் அதற்கு இந்தப் படம் ஒரு ஆரம்பப் புள்ளி. இப்படத்தின் மூலம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்று ஒரு சில இன்டர்வியூகளில் இருவரும் பேசி இருந்தனர்.

அதனால் தான் படம் பற்றிய நினைவுகளை பகிரும் போது தனக்கு அனைத்தையும் கொடுத்தது என சூர்யா பதிவிட்டு இருந்தார். அன்பு செல்வன் கதாபாத்திரத்தில் போலீஸ்காரராக நடித்திருந்தார் சூர்யா. எனவே இந்த கதாபாத்திரம் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காக்க காக்க படத்தின் இளம் கன்றுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் டெக்னீசியன்களுக்கு வாழ்த்து கூறிய அவர் ஜோ, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என அனைவருக்கும் நன்றி சொல்லி இப்படத்தில் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். இன்னும் நிறைய நல்ல நினைவுகள் இருப்பதாகவும் அவர் இரு புகைப்படங்களை பகிர்ந்து சுட்டிக்காட்டி உள்ளார். இந்த ட்விட்டில் ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆண்டனி, ராஜீவன், தாமரை, வி கிரியேஷன்ஸ் என அனைவரையுமே டேக் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 1ம் தேதி 2003 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. சினிமா விமர்சகர்களிடம் பாசிட்டிவ்வான ரிவியூக்களை பெற்று சிறந்த பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றது.

மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரி சூர்யா. ஐபிஎஸ் அதிகாரியாக அன்பு செல்வன் கதாப்பாத்திரத்தில் சென்னை நகரில் பணியாற்றுவார் க்ரைம் பிரான்ச் ACP ஆகவும் இருப்பார். அவருக்கு என உறவுகள் யாரும் இல்லை. பயமும் இருக்காது. ஸ்ரீகாந்த், அருள், மற்றும் இளமாறன் ஆகிய நண்பர்கள் மட்டுமே உண்டு.

ஜோதிகாவை பார்த்ததும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் மலரும். கிரிமினல்களை கொல்வது மட்டுமே பணி என சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு மாயா எனும் பெயரில் அறிமுகமாவார் பள்ளி ஆசிரியை. அவர்தான் ஜோதிகா. லைசன்ஸ் இல்லாமல் பிடிபடும்போது காவல்துறையை அதிகாரியான அன்புச்செல்வனின் உதவியை நாடுவார் ஜோதிகா. இருவருக்கும் இடையே மரியாதை அதிகரிக்கும். பின், மாயாவுக்கு ஒரு விபத்து ஏற்படும் போது அதிலிருந்து மீள அன்பு செல்வன் உதவுவார். அப்போது அவர்களுக்குள் காதல் மலரும்.

இதை அடுத்து ஒவ்வொரு ரவுடிகளையும் தீர்த்துக்கட்டிய பகை அன்புச்செல்வனை துரத்தும். மாயாவும் அன்பு செல்லனும் காட்டேஜ்க்கு ஹனிமூன் சென்றபோது அன்புச்செல்வனை தாக்கிவிட்டு மாயாவை கடத்துவார்கள். மாயாவை மீட்க மீண்டும் எழுவார் அன்புச்செல்வன்.

எதிரிகளுடன் போராடும் போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாயா இருந்துவிட அவர் எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் என்பதை முழு கதையாக அமைந்தது.

20 ஆண்டுகள் கழித்தும் இன்னும் நினைவில் இருந்து நீங்காத பசுமையாய் இந்த படம் உள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

Facebook
Instagram
YOUTUBE