கல்லூரி செல்லும்போது ரூ.10 பாக்கெட் மணியாகக் கிடைப்பதே அரிது. 3 பேருந்துகளில் மாறி மாறி ஏறி கல்லூரிக்கு சென்று வர மாதம் முழுதாக ரூ.1,000 கூட இருக்காது. இருப்பினும் பொறுமையாக இருந்து அலகாபாத் ஐஐஎம்-ல் படிப்பை முடித்தார் திவ்யா ராவ்.

தனது கல்லூரி பேராசிரியர் ஒருவர் “இந்தியர்கள் வேஸ்ட்” எனக் கூறவே வெகுண்டு எழுந்தார் திவ்யா ராவ். இவர் இந்தியர்கள் மிகத் திறமைசாலிகள் என்றும், தொழில் என்று தொடங்கிவிட்டால் அதில் மிக நேர்த்தியாக கவனம் செலுத்தி வெற்றிகளை குவிப்பார்கள் என்றும் நிரூபிக்க நினைத்தார்.

ராமேஸ்வரம் கஃபே

வெறும் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் ராமேஸ்வரம் கஃபே. இன்று பெங்களூரில் திரும்பிய பக்கம் எல்லாம் கிளைகள் வைத்து கோடிகளை குவித்து வருகிறது.

10 x 10 அறை

குறிப்பாக இந்திரா நகரில் உள்ள கடையில் 10 x 10 அல்லது 10 x 15 என்ற அளவில் தான் வர ஹோட்டல் அறை இருக்கும். அமர்ந்து சாப்பிட இருக்கை கூட இருக்காது. ஆனால், மக்கள் வரிசை கட்டிக்கொண்டு நின்றபடியே சாப்பிட்டு ருசித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, கிடைத்த இடத்தில் அமர்ந்து வயிறாற, வகை வகையான உணவுகளை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.

பொடி தோசை, இட்லி பொடிமாஸ் என பல அயிட்டங்களையும் பரபரப்பாக விற்றுத் தள்ளுகின்றனர்.

7,500 பில், ரூ.4.5 கோடி வருமானம்

UDAAN நிறுவனத்தின் பாட்காஸ்டில் பேசிய சுஜித் குமார் எனும் தொழில்முனைவோர், ராமேஸ்வரம் கஃபோவை சிறந்த QSR நிறுவனமாகக் குறிப்பார். இந்தக் கடையில் ஒரு நாளில் சுமார் 7,500 பில்கள் போடப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒரு கடையில் மட்டும் ஒரு மாதத்திற்கு ரூ.4.5 கோடி வருமானம் வருவதாகவும் 70% லாபத்தை அவர்கள் எடுப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு 80 பிளேட் உணவு

ஒரு மணி நேரத்திற்கு 80 பிளேட்கள் உணவு பரிமாறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரே ஒரு கடையின் நிலைமை மட்டும் தான். பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் இவர்களது கிளைகள் இருப்பதால் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது.

இதில் சுற்றுச்சூழல் அமைப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அருமையான சுவையான தரமான உணவுடன் கண் கவரும் வகையில் எளிமையான இன்டீரியர் வசதி செய்யப்பட்டுள்ளது. இருக்கைகளே இல்லாவிட்டாலும் நின்று கொண்டாவது ஆர்டர் செய்து சாப்பிட்டு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இரவு நேரங்களிலும் கடை திறந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் குறிப்பாக பெங்களூரு ஐடிக்களில் பணியாற்றும் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகம் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்கின்றனர்.

YouTube

பல்வேறு உணவு விமர்சகர்களை அழைத்து அந்த நிறுவனம் புரமோசன் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில யூடியூபர்கள் தாங்களாகவே வந்து இந்த கடையில் பரபரப்பான சூழலையும், சுவையான உணவையும் பற்றி விமர்சித்து வீடியோக்களை போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் அவர்களது தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE