நடிகர் பப்லு பிரித்விராஜ் ஏற்கனவே பீனா என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருந்தார். அவருக்காகவும், அவரைப் போன்ற ஆட்டிசத்தால் பாதித்த பல குழந்தைகளுக்காகவும் அவர்கள் சிறப்பு பள்ளியே வைத்து நடத்தி வந்தனர்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு, தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்தார் பப்லு. இருவரும் ஜோடி சேர்ந்து இன்ஸ்டாவில் மணமாகாத 90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும் வகையில் வீடியோக்களையும், ரீல்ஸ்களையும் பதிவேற்றி வந்தனர்.

இதனிடையே ஷீத்தல் தனியாக நடனமாடி போட்ட ரீல்சில் இருவரும் பிரிந்துவிட்டனரா? என ஒருவர் கமென்டில் கேட்டதற்கு ஷீத்தல் ஹார்டினும் கொடுத்திருக்கிறார். இதில் இருந்து இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகிவிட்டது என செய்திகளிலும் வலம் வரத் தொடங்கின.

இதுபற்றி, பப்லு அமைதியாகவே இருந்தார். விளக்கம் கேட்ட பத்திரிக்கையாளரிடம் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

‘வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறிவிட்டேன்’

‘இந்த வயதிலும் நான் ஹேப்பியா இருக்கிறேன். என்னை போலவே எல்லோரும் ஹேப்பியா இருக்கவேண்டும் என்று நான் குழந்தை தனமாக நினைத்து, வெளியே சொன்ன சில விஷயங்கள் இப்போது எனக்கெதிராகவே திரும்பி இருக்கிறது.

அனைவருமே காரி துப்புகிறார்கள். இனியும் என் சந்தோஷத்தை வெளியே சொல்லி நான் எதுக்கு அவமானம் தேடிக்கொள்ள வேண்டும்? ஷீத்தலுக்கும், எனக்கும் இடை யே என்ன ஆனது? என்பதெல்லாம் என் தனிப்பட்ட விஷயம். இனியும் என் தனிப்பட்ட விஷயத்தை வெளியே பேசமாட்டேன்.

என்னை பற்றிய கேலி, கிண்டலுக்கு நானே எதுக்கு இனியும் தீனி போட வேண்டும்?’ என்று ஆதங்கப்பட்டார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE