உடல் ஆரோக்கியத்துக்கும் சுறுசுறுப்புக்கும் மிகவும் அவசியமானது மூளை.

மூளை சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் நாள் முழுவதும் புத்துணர்வோடு இயங்க முடியும். ஆனால், நம்மையே அறியாமல் ஒரு சில செயல்கள் நமது மூளையின் சுறுசுறுப்பையும் செயல்பாட்டையும் குறைக்கிறது.

  • அதிக சர்க்கரை

அதிக இனிப்புள்ள பொருட்களை உட்கொள்வது மூலம் மூளை சுருங்கும் என நம்பப்படுகிறது. புற்றுநோய் செல்களுக்கும் இனிப்பானது மிகவும் வளர்ச்சியை தூண்டக்கூடிய பொருள் என்பதால் அதிக இனிப்பை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் மூளை சுருங்கி ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக்கசிவோ, பக்கவாதமோ, உயிரிழப்போ ஏற்படக்கூடும்.

  • தூக்கம் இன்மை

உடலுக்கும் மனதுக்கும் போதிய அளவு ஓய்வு தேவை. அதனை உறுதி செய்வது உறக்கமே!. ஆனால் அத்தகைய உறக்கம் தடை படும் போது மறுநாள் செய்யும் பணிகளுக்கு மூளை ஒத்துழைப்பு வழங்காமல் அடம் பிடிக்கும். எனவே சரியான நேரத்தில் உறங்கி போதிய அளவு ஓய்வை மூளைக்கு கொடுப்பது நல்லது.

  • கோபம்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல்தான் கோபப்படும் போது, மூளையின் செல்களுக்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தத்தின் காரணமாக மூளையின் அனைத்து பாகங்களும் சரிவர செயல்படாது போகும்.

  • புகை, மது

புகைப்பழக்கம் மதுப்பழக்கம் போன்றவை மூளையின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும். புகையும் மதுவும் ஒரு சில ரசாயன சுரப்பில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் மூளை தன் செயல்பாட்டை இழக்க நேரிடும்.

  • ஊட்டச்சத்து பற்றாக்குறை

உடலுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து கிடைப்பதை சத்தான உணவு பொருட்கள் உறுதி செய்கின்றது. அதேபோல்தான், மூளையும் செயல்பாட்டுக்கும் ஊட்டச்சத்து அவசியமாகிறது. எனவே சரி வர சத்தான உணவுகளை சாப்பிடாதவர்கள் மூளை மந்த நிலையை அடிக்கடி எதிர்கொள்வார்கள்.

  • திரை நேரம்

ஸ்கிரீன் டைம் என்ற திரை நேரம் குழந்தைகளுக்கு அதிக அளவு வழங்கக் கூடாது என்பதை பெற்றோர்கள் அறிந்த ஒன்று. ஆனால் இந்த ஸ்கிரீன் டைம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் பெரும்பாலானோர் புரிந்து கொள்வதில்லை. அதிக நேரம் திறை பார்ப்பதால் மூளை சுயமாக சிந்திப்பதை நிறுத்தி திரையில் வரும் காட்சிகளின் பின்னே ஓடும். இது ஒரு வித அடிமைத்தன்மையை மூளைக்கு பழக்கப்படுத்தி விடும் அபாயமும் உள்ளது. எனவே தான் மூளை செயல்பாட்டை அதிகரிக்க சிறுநீரகத்தை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர்.

இது போன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள “த காரிகை“-யின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE