விடைபெற்றார் கிரிக்கெட் உலகின் மன்னன்

0

கிரிக்கெட் உலகில் ‘கிங்’ என்று அழைக்கப்படும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஃபேர்வெல் போட்டியே இல்லாமல், திடீரென ஓய்வை அறிவித்திருப்பது ஏன் என்று அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஓய்வு அறிவிப்பு ஏன்?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா செயல்பட்டு வந்தார். அவர் தலைமையில் BGT தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, டெஸ்ட் கேப்டனை மாற்ற பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த தகவல் கிடைத்தவுடன் ரோகித் ஷர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை கடந்த வாரம் அறிவித்தார்.

ரோகித் ஷர்மாவின் ஓய்வைத் தொடர்ந்து விராட் கோலி தனக்கு கேப்டன் பொறுப்பை தருமாறு கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கும் பிசிசிஐ செவி சாய்க்கவில்லை. ஆகையால், விராட் கோலியும் இன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூத்த வீரர்களை ஒதுக்கிவிட்டு ஷுப்மன் கில்லை கேப்டனாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலியின் சாதனைகள்

2011ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, இன்று வரை 123 போட்டிகள் விளையாடி 9,230 ரன்கள் குவித்திருக்கிறார். இதில், 7 இரட்டை சதங்களும், 30 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும். 

xr:d:DAFmi9VgdSI:223,j:7514653281687117309,t:23072208

அது மட்டுமல்லாமல், டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் சாதனைகள் இன்றியமையாதவை. இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனைகளை அவர் செய்துள்ளார்.

மனைவி அனுஷ்காவின் உருக்கம்

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “ரசிகர்கள் நீங்கள் செய்த சாதனைகள் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், நீங்கள் மறைத்த கண்ணீரையும் போராட்டத்தையும் நான் மட்டுமே அறிவேன். டெஸ்ட் போட்டிகளுக்கான நீங்கள் செய்த தியாகங்கள் ஏராளம். ஆனால், உங்களது கடைசி கிரிக்கெட் போட்டி, உங்களுக்கு விருப்பமான டெஸ்ட் போட்டியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். அது நடக்காதது வருத்தம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் முதல் கடைமட்ட ரசிகன் வரை

நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான ஒருவரின் ஓய்வு சச்சின் டெண்டுல்கர் முதல் கடைமட்ட ரசிகன் வரை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் X தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விராட் கோலிக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர். WE MISS YOU KING.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *